ஒரு சந்தேகம்!
இன்சமாம் உல் அக் இன்று அளித்துள்ள பேட்டியில் அவரது ரன் - அவுட் ஆட்டத்தின் மரியாதையையே கெடுத்துவிட்டதாகவும், இந்தியா இப்படி செய்யும் என எதிர்பார்க்கவே இல்லை எனவும் கூறியிருக்கிறார் (http://usa.cricinfo.com/pakvind/content/current/story/236128.html).
இந்தியா எப்பொழுதும் விட்டு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டுமென நினைத்தாரோ?
அல்லது
கொல்கத்தாவில் நடந்த ஆசிய கோப்பை டெஸ்ட் போட்டியின் போது, ஷோயப் அக்தர் சச்சின் ஓட்டம் எடுக்க முயன்ற போது, தவறுதலாக (என நம்புவோமாக), அவரைத் தடுத்த போது, அப்பீல் செய்யாமல் தான் இருந்தார்களா அவர்கள்?
அவர்களுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயமா? என்ன ஐயா இது ஒரு தமாசு?
3 Comments:
வாங்க வாங்க துபாய் நண்பரே!
நீங்களும் கிரிக்கெட் பிரியரா, ரொம்ப சந்தோசம்.
நச்சென்று ஒரு கேள்வி, இதை உடனே இன்சமாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இன்று ஆட்டத்தில் சோயப் மாலிக் செய்ததை பார்த்தீர்களா..... ஜாஹிர் கான் ரன் அவுட் செய்ய எடுக்க வந்த பந்தை கலால் உதைத்து தூர தள்ளியதை.......(but this time india has not appealed for out) என்ன பண்றது... பொழைச்சு போகட்டும். சரிங்க போய் மிச்சம் பாதி match யும் பார்த்துட்டு வந்திற்றேன். ஜெயிக்கிற நேரம்...........
நன்றி பரஞ்சோதி மற்றும் 'மனசு'
இன்சமாம் அப்படி கேட்ட கேள்வியினால் தான் மாலிக் செய்ததற்கு நமது 'வீரர்கள்' அவுட் கோரவில்லை.
அவ்வகையில், இன்சமாமுக்கு வெற்றியே.
இந்திய ஆட்டக்காரர்கள் கண்ணாடி போல, அடித்தால் ஒடிந்து விடுவார்கள். அடிக்க அடிக்க உறுதியாகும் இரும்பு போல எப்போது தான் ஆவார்களோ?
Post a Comment
<< Home