2006/02/12

குட்ட குட்ட குனியும் ....

இந்தியா கடைசியில் இந்த தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்த வெற்றி ஒரு நிறைவான
வெற்றியாகும். இந்த தொடரில் எப்பொழுதும் சோடை போகும் நமது
பந்து வீச்சாளர்களின் நல்ல முயற்சியே இதற்கு காரணம்.

இந்த போட்டியிலும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் நடைபெற்றது.
ஷோயப் மாலிக் ரன் எடுக்க முயன்ற போது, தான் ஆட்டமிழக்க நேரிடும்
எனத் தெரிந்தவுடன், காலால் பந்தினை உதைத்து தன்னை தப்பிக்க
வைத்துக்கொண்டார். அதற்கப்புறம் அவர் மேலும் 47 ரன்களை
எடுத்தார். போட்டியின் 'நியாயம்' என ஒன்று இருக்கிறதல்லவா? சதம்
அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். வேறு எப்படி? அதே ரன் அவுட்
தான். அரசன் அன்று கொல்வான்.... என்ற ஒரு பழமொழி தான்
ஞாபகத்திற்கு வருகிறது.

எனது கேள்வி இது தான். ஏன் இந்தியர்கள் இந்த நிகழ்வுக்கு நடுவரிடம்
அவுட் கோரவில்லை? போன ஆட்டத்தில் நடந்த விஷயத்தினால் எழுந்த
சர்ச்சையினாலா? அப்படியானால் இனி மேல் பாகிஸ்தானுக்கு எதிராக
எப்போதுமே இப்படித் தான் 'எது நடந்தாலும்' எதுவே செய்ய
மாட்டார்களா? இதனால் இந்தியாவிற்குத் தான் தோல்வி, இன்சமாமுக்கு
வெற்றி.

இந்தியர்களின் சுபாவம் அறிந்து தான் இன்சமாம் இப்படி கூறியிருந்தார்
எனவே சொல்லலாம். அவர் எதிர்பார்த்தது போலவே, இந்தியாவும்
வளைந்து கொடுத்து விட்டது.

நமக்கு எதிராக ஒருவர் குறை கூறுகிறார் எனில், நமக்கு ஏன் எதிர்த்து
போராட தோன்றவில்லை (இது ஒரு குறையோ குற்றமோ இல்லை, ஆட்ட
விதிகளுக்கு உட்பட்ட விஷயம். எனினும்......?).

குட்ட குட்ட குனியும் குணம் நமக்கு எப்போது தான் போகுமோ?

0 Comments:

Post a Comment

<< Home