2006/02/14

கிரிக்கெட்டில் சில புதிய யோசனைகள்

சமீப காலத்தில் ஒரு நாள் ஆட்டங்களில் ஐ.சி.சி. (ICC) பல புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. அவை நிறைய கவர்ச்சியையும் விறுவிறுப்பையும் ஆட்டத்தில் தந்துள்ளது என்பது உண்மை.

எனக்கு தோன்றிய சில யோசனைகள்:

1) ஒரு காலத்தில், No-ball மற்றும் Wide உதிரி (extra) ரன் கிடையாது. அதாவது, அந்த பந்தில் ரன் எடுத்தால் No-ball'க்குரிய ஒரு ரன் அதிகமாக கிடைக்காது. ஆனால், இப்பொச்ழுது அப்படி இல்லை. No-ball'லில் ஒரு ரன் எடுத்தால் மற்றும் எடுத்த ரன் இரண்டுக்கும் சேர்த்து மொத்தம் இரண்டு ரன் கிடைக்கும். இதே போலத்தான் Wide ballலில் ஒரு ரன் எடுத்தால் (mostly bye run) , wide ball மற்றும் அந்த bye ரன் இரண்டும் சேர்த்து மொத்தம் இரண்டு.

ஆனால் இந்த விதிமுறை முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை என்பது எனது கருத்து. ஏன் கூறுகிறேன் என்றால், ஒரு வேளை ஒரு No ball, wide பாலாக வீசப்பட்டது என வைத்துக்கொள்வோம். அதற்கு No ball மட்டுமே ஒரு ரன்னாக அளிக்கப்படுகிறது. இது சரியில்லை தானே?

மேற்கண்ட விதியின் படி No ball மற்றும் wide ball இரண்டுக்கும் சேர்ந்து 2 ரன்கள் அல்லவா அளிக்கப்பட வேண்டும்?

இப்படி அளித்தால் தான் சரியாக இருக்குமென்பது எனது யோசனை.

2) இந்தியா பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டிகிளின் போது ஆடுகளத்தினைப்பற்றி எழுந்த சர்ச்சை யாரும் அவ்வளவு சீகிரமாக மறந்து இருக்க மாட்டார்கள். ICC'க்கு இதற்கும் ஒரு யோசனை.

ஒரு அணி தனது சொந்த நாட்டில் ஆடுவதே அதற்கு மிக பெரிய பலம். பழகிய சூழ்நிலை, சீதோஷணம், மற்றும் சொந்த நாட்டு ரசிகர்கள். இது போதாதென்று, அவர்க்களுக்கு ஏற்றார்போல ஆடுகளமுமா?

ICC ஆடுகளத்தினை அமைப்பதற்காக ஏன் நடுநிலையான நிபுணர்களை நியமிக்கக்கூடாது? நடுவர்களை நியமிப்பது போல? இப்படி ஆடுகளம் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு ஆட்டமும் விறுவிறுப்பானதாக இருக்குமே?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

2 Comments:

At 3:35 PM, February 16, 2006, Blogger manasu said...

super sub முறையையே எடுத்திரலாமான்னு உங்க ஊர்லதான் மீட்டிங் நடக்குது இப்ப.

ஒரு எட்டு போய்பாருங்களேன்!!!!!!!

 
At 12:57 PM, February 18, 2006, Blogger Unknown said...

அது ஒரு நல்ல யோசனை, அதனை toss முடித்ததற்கப்புறம் அறிவித்தால் அதனை நன்றாக உபயோகப்படுத்தலாம். நம்ம மாதிரி ஆட்களை எல்லாம் யாருங்க கேட்கிறாங்க?

என்னை அங்கே meeting'லே சேர்த்துகிட்டா அவங்களுக்கு வேலை இல்லாம போயிடும்னு பயம். அதான் நானும் போனா போகட்டும்'னு போகலே.

நன்றி.

 

Post a Comment

<< Home