2006/02/16

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

சூரிய ஒளி நமது முடியை வெளுப்பாக்குகிறது, ஆனால் தோலை கருப்பாக்குகிறது. ஏன்?

பெண்களால் வாயை மூடிக்கொண்டு மஸ்காரா இடமுடியாது. ஏன்? (உண்மையா?)

"Abbreviated" இவ்வளவு பெரிய வார்த்தை. ஏன்?

மருத்துவார்கள் தனது சிகிச்சையை 'பயிற்சி' என்கிறார்கள். ஏன்?

எலுமிச்சை ரசம் பெரும்பாலும் செயற்கையான சுவையால் செய்யப்படுகிறது. ஆனால் பாத்திரம் கழுவும் திரவமோ, உண்மையான எலுமிச்சை ரசத்தால் செய்யப்படுகிறது. ஏன்?

பூனை உணவில் 'எலி-சுவை'யான உணவு கிடையாது. ஏன்?

குற்றவாளிகளை கொல்ல பயன்படுத்தும் ஊசிகளை சுத்தப்படுத்துகிறார்கள் (sterilize) - ஏன்?


நன்றி - மெயில் அனுப்பிய நண்பி

5 Comments:

At 9:42 AM, February 16, 2006, Blogger ஏஜண்ட் NJ said...

7 times ஏன்? in your POST!

but....

5 times ஏன்? in the TITLE!

ஏன்?

 
At 10:09 AM, February 16, 2006, Blogger Unknown said...

வருகைக்கு நன்றி

எல்லோரும் உங்களைப் போல கவனிக்கிறார்களா என பார்ப்பதற்காகத்தான்.

தங்களைப்போன்ற பழம் தின்று கொட்டை போட்டவர்கள் வருவதற்காகவும் இருக்கலாம்?

 
At 4:05 PM, February 28, 2006, Blogger J S Gnanasekar said...

1) Pronounciation என்ற வார்த்தையை pronounce செய்ய இவ்வளவு கஷ்டம் ஏன்? ஏன்? ஏன்?

2) குரங்கில் இருந்து மனிதன் வந்தால், இன்னும் குரங்குகள் இருப்பது ஏன்? ஏன்? ஏன்?

சும்மா நான் கேள்விப்பட்டவைகளைச் சொன்னேன்.

-ஞானசேகர்

 
At 8:55 AM, March 17, 2006, Blogger Sam said...

பூனை பேசுமா? ம் ம் ம் ............

உங்களுக்கு எப்படித் தெரிந்தது
சும்மா விளையாட்டாய்த்தான் கேட்கிறேன்.

அன்புட்ன்
சாம்

 
At 1:30 PM, March 18, 2006, Blogger Unknown said...

பூனை பேசாமலே, அதை எலி பிடிக்க சொல்கிறோமே? பேச ஆரம்பித்தால், அது நம்மை பிடிக்க் ஆரம்பித்து விடும் சாம்.

தெரிந்து தான் சொல்கிறேன்.

 

Post a Comment

<< Home