2006/02/18

லண்டன் எங்கே இருக்கிறது?

நேற்று தான் நம்ம சிம்பு நடித்த 'சரவணா' படம் பார்த்தேன். படம் எப்படி இருக்கிறது என்று எல்லாருக்கும் இந்நேரம் தெரிந்திருக்கும். எனவே அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை.

அப்படத்தில், ஜோதிகா லண்டனில் படிக்கிறார்களாம். அப்போது தனது அண்ணனுக்கு அங்கு இருப்பதை வீடியோ படம் எடுத்து அனுப்புகிறார்கள். இதில் என்னப்பா என்கிறீர்களா? அங்கே தான் விஷயம்.

அதில் லண்டனாக காண்பிப்பதில் ஒரு காட்சி இங்கே துபாயை. இங்கே இருக்கும் ஷேக் சாயத் நெடுஞ்சாலையையும் காண்பித்து, அதுவும் லண்டன் என்கிறார்கள். துபாய்க்கே திர்ஹாமா? (அல்லது ஒட்டகம், பாலைவனம் எது வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்).

இது தமிழ் சினிமாவில் இன்று நேற்றல்ல. ரொம்ப காலமாக நடக்கிறது என்று சமீபத்தில் மலேசியா போனபோது தான் தெரிந்தது. அங்கே நான் சென்ற பூங்கா, ப்ரியா படத்தில் சிங்கப்பூராக காண்பிக்கப்பட்டது.

அன்றே S.P. முத்துராமன் ஆரம்பித்து வைத்தார். இன்று ரவிக்குமார் தொடர்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருமா அங்கே சென்று பார்க்கப்போகிறார்கல் என்ற எண்ணம்?

அந்தக்காலத்திற்கு வேண்டுமானால் அது ஒத்து வந்திருக்கலாம். இப்போது தான் தமிழர்கள் எல்லா ஊரிலும் இருக்கிறார்களே? சுற்றுப்பயணம் சென்று பார்ப்பவர்களும் நிறைய் இருக்கிறார்களே. கொஞ்சம் பார்த்து செய்ய்லாம் இல்லையா?

யாராவது லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்று, ஷேக் சாயது சாலையை கேட்டுத்தொலைக்காதீர்கள், என்ன?

2 Comments:

At 5:20 PM, February 18, 2006, Blogger Voice on Wings said...

ஊட்டியை காஷ்மீர்னு (ரோஜா படத்துல) தமிழ்நாட்டுக்காரங்க கிட்டயே கத வுட்ட மணிரத்னத்தை விட்டுட்டீங்களே :)

 
At 8:03 AM, February 19, 2006, Blogger Unknown said...

நன்றி வாய்ஸ்,

அது காடு தானே? எங்கே இருக்கிற காடு வேண்டும்னாலும் காண்பித்து இது தான்னு சொல்லிக்கலாம். ஆனா, இங்கே இருக்கிற அந்த ஓட்டல், கட்டிடம் எல்லாம் லண்டனில் இருக்குனு சொல்றது கொஞ்சம் ஓவர் இல்லே?

இன்னும் எத்தனை இருக்கோ இந்த மாதிரி?

 

Post a Comment

<< Home