சிவாஜி படத்திலிருந்து 'ஷ்ரேயா' நீக்கமா?
ஷார்ஜா நட்சத்திரக் கிரிக்கெட்டின் எதிரொலி
(நமது சிறப்பு நிருபர் ஐடியா ஐயாச்சாமியின் சிறப்பு தொகுப்பு!).
கடந்த வாரம் தெலுங்குப்பட உலக சினிமா நட்சத்திரங்களுக்கும், தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நடந்தது அனைவரும் அறிந்ததே.
இந்தப்போட்டியில் தெலுங்கு நட்சத்திரங்களே வெற்றி பெற்றனர். இந்தப்போட்டியினால், பல சுவையான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை பற்றிய சிறப்புத்தொகுப்பு:
முதல் சுவையான விஷயம் - சிவாஜி பட நாயகி ஷ்ரேயா பற்றியது. அவர் தற்போது தமிழ் படத்தில், அதுவும் சூப்பர் ஸ்டாருடன் நடித்து வருகிறார். ஆனால் போட்டி நடந்த போது, அவர் முழுவதும் தெலுங்கு அணிக்கே ஆதரவு தந்ததை அனைவரும் டிவியில் பார்த்திருப்பீர்கள். இதனால் எரிச்சலடைந்துள்ள தமிழ்நாட்டு நடிகர்கள், அவரை சிவாஜி தமிழ்ப் படத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், அவர் இனிமேல் எந்த தமிழ் படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுக்கக் கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது 'தமிழ்' சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ரஜினி இதற்கு இணங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஞ்ஜலா நிவாரண நிதி
இந்தப்போட்டியை காண வந்த மும்பை நடிகை ஏஞ்ஜலா (உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் பிரபு தேவாவுடன் நடித்தவர்), அவரது ஏழ்மை நிலையை பிரதிபலிக்கும்படி உடை அணிந்து வந்திருந்தைக் கண்ட ஷார்ஜா வாழ் மக்கள், அவர்து 'உடை' நிதிக்காக ஒரு இயக்கத்தினை துவக்கியுள்ளார்கள்.
அவரது ஏழ்மையை அனைவரும் பார்க்க வேண்டும் என, ஏஞ்ஜலா மைதானத்தை சுற்றி சுற்றி வந்தார். இதனால், பலர் கண்ணீர் விட்டனர். விட்ட கண்ணீர் ஆறாகப் பெருகி ஆட்ட மைதானத்தை நனைத்ததால், ஆட்டம் சில நிமிடங்களுகு தடைபெறுமோ என அஞ்சி, போட்டி நடத்தியவர்கள் ஏஞ்ஜலாவை ஒரே இடத்தில் அமர செய்தனர்.
ஜெயா டிவியின் மற்றுமொரு சாதனை
50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் சர்வதேசப்போட்டிகள், சுமார் ஒரு அணிக்கு மூன்றரை மணி நேரம் வீதமாக, ஏழரை மணி நேரம் நடக்கும் (உணவு இடைவேளையையும் உட்பட) என்பது அனைவரும் அறிந்தே. ஆனால் 30 ஓவர்களே கொண்ட இந்த நட்சத்திர போட்டியை, சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக 'ஒளி பரப்பி' ஜெயா டிவி சாதனை படைத்துள்ளது.
இடையில் ஜெயா டிவியின் செய்திகள், இரவு 7.30 மணிக்கு இருந்ததால், ஒரு 30 நிமிட நேரடி ஒளிபரப்பை பார்க்க இயலாது என (துபாய்வாசி போன்ற) ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், ஜெயா டிவியின் தொழில்நுட்பத்தால், விட்ட இடத்திலிருந்தே 'நேரடியாக' இந்த ஆட்டம் ஒளிபரப்பானது.
தூர்தர்ஷன் இந்தத் தொழில்நுட்பத்தின் ரகசியத்தினை, ஜெயா டிவியிடமிருந்து அறிய மிகவும் ஆவலாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும் தான் தான் ஆட்டங்களிடையே விளம்பரங்களை செருகுவதில் முடிசூடா மன்னன் என நினைத்திருந்ததை, ஜெயா டிவி விளம்பரங்களிடையே ஆட்டத்தினை ஒளிபரப்பி அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே, இந்த தொழில்நுட்பத்தினை தூர்தர்ஷனுக்கு வழங்க முடியும் என ஜெயா டிவி நிறுவனம் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நமது சிறப்பு நிருபர்
ஐடியா ஐயாச்சாமி
2 Comments:
ஷார்ஜா சம்பந்தமான கிரிக்கெட் பதிவு கேட்டாலும் கேட்டேன்... ஏன் கேட்டேன்னு கதற உட்டுட்டீங்களே? ஆமா.. அந்த ஏழைப் பொண்ணு ஏஞ்சலா படம் எதுவும் உங்களுக்கு கிடைக்கலீயா? இல்ல நம்ம பிளாக்ல்ல படம் போட்டு உடை நிதி கலெக்ஷன் பண்ணலாம்ன்னு பாக்குறேன்....
வாங்க தேவ்.
இது உங்கள் விருப்பம். இப்போது அவதிப்பட்டு என்ன பிரயோஜனம்? ;))
ஏழைப்பொண்ணு பார்த்துகிட்டே இருந்ததிலே, போட்டோ ஏதும் புடிக்க முடியலே. அவ்வளோ துக்கம்பா அவங்களைப்பார்த்து! :-)
Post a Comment
<< Home