இரண்டு பங்கு வோட்கா + 1 பங்கு எலுமிச்சை
உன்னைத் தவிர நான் யாரையும் காதலிக்க முடியாது
என நினைத்திருந்தேன்,
உன் தங்கையைப் பார்க்கும் வரை!
ரோஜாக்கள் சிவப்பு, சர்க்கரை இனிப்பு - உன்னைப்போலவே,
ரோஜாக்கள் உதிர்கின்றன,
சர்க்கரைக் கிண்ணம் காலி - உன் மண்டையைப்போலவே!
கனிவு, புத்திசாலித்தனம்
இவை எல்லாமே உன்னை பிரதிபலிக்கின்றன,
எதிர்மாறாக!
உன்னைப் பற்றி எல்லாமே எனக்கு பிடிக்கும்,
உன்னுடைய புன்னகை, உன் முகம், உன் கண்கள்,
சே, உன்னால் நான் என்னவெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது?
உன் முகத்தைப் பார்க்கும் போது தான் எனக்கு எல்லாக் கனவுகளும் தோன்றுகின்றன,
அதனால் தான், நான் பேய்க் கனவு கண்டது போல் அலறிக்கொண்டு எழுந்திருக்கிறேன்.
இந்த மாதிரி கவிதை எழுதத் தேவை = தலைப்பைப் பார்க்கவும்!
8 Comments:
ஆகா துபாய்வாசி!
உங்களமாதிரி ஒரு ஆளத்தான் தேடிகிட்டு இருக்கேன் ! ரொம்ப கலக்கலா இருக்குங்க கவிதை ! உங்க கவிதைல மட்டும்தான் உண்மை தாண்டவமாடுது ! ரொம்ப ரசிச்சேன் ! நான் வேணும்னா ஒரு repeat சொல்லட்டுமா ? வோட்காவுக்கு ? :))
ஆஹா....
கவித...கவித...
ம்...எளக்கியம்...சமைக்க...ஆரம்பிச்சிட்டீங்க...போல...
வாழ்க....வளர்க...
எல்லாம் உங்க ஆசீர்வாதம்! ;)
நன்றி ஜொள்ளு, உங்கள மாதிரி ஆளுங்க தான் எனக்கு inspiration!
ஒரு repeat என்ன, 1000 repeat சொல்லுங்க! :)
எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு
உங்களுக்கு இரண்டு பக்கங்களையும் பார்க்கத்தெரிந்திருக்கிறது! வாழ்த்துக்கள்!
வாருங்க துபாய் வாசி..
கவிதைகளை கண்டு மனம் விட்டு சிரித்தேன்..
பாராட்டுக்கள்
ஆகா, நல்லா கலக்குறீங்க தலைய்.
நிலவு நண்பனிடமிருந்து ஒரு பாராட்டு, அதுவும் என்னுடைய 'உளறலுக்கு' - பெருமைப்படுகிறேன்.
நன்றி சுப்பையா & தனரா!
Post a Comment
<< Home