ராகுல் டிராவிடின் சாணக்கியம்!
எதிர் பார்த்தை விட மிக எளிதாக வெற்றி பெற்றது இந்தியா. டிராவிடின் மிக சமயோஜிதமான வழிநடத்தல் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
முத்து எழுதியுள்ள இந்தப் பதிவில், ராகுல் டிராவிட் பற்றி எழுதியுள்ளார்.
டிராவிடின் முக்கியமான மற்றுமொரு பாராட்டத்தக்க விஷயம் ஒன்று உள்ளது. பரிசளிப்பு முடிந்தவுடன் கொடுத்த பேட்டியில், தனது அணியை அவர் பாராட்டிய விதமும், தனது பயிற்சியாளர் மற்றும் மேலாளர் அனைவரின் பங்கையும் மறக்காமல் குறிப்பிட்ட விதமும் மிகவும் பாராட்டத்தக்கது. அது மட்டுமல்லாமல், கங்குலி கூட செய்யாத ஒரு விஷயம் டிராவிட் செய்தார்.
இந்த மொத்தத் தொடரும் ஒரு 'நல்லிணக்கத் தொடர்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதற்கான முத்திரையை ராகுல் தனது பேச்சின் மூலம் வைத்தார்.
பாகிஸ்தான் அணிக்கு விளையாடிய விதத்திற்காகவும் மற்றும் விருந்தோன்மைக்காகவும், பாக் மக்களுக்கு வரவேற்பு மற்றும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் பேட்டியளித்தது அவர் எவ்வளவு புத்திசாலியான தலைவராக உறுவாகிவருகிறார் என்பதையே காட்டுகிறது.
ஆட்டத்தில் மட்டுமல்ல, இதிலும் இன்சமாமை டிராவிட் வீழ்த்திவிட்டார்!
Well Done Dravid!
2 Comments:
டிராவிட் நன்றாக ஜொலிக்கிறார். வாழ்த்துக்கள் துபாய்வாசி.
வாழ்த்துக்கு நன்றி மூர்த்தி அவர்களே.
Post a Comment
<< Home