2006/02/19

தேனியா தேளா?

நேற்று தங்க வேட்டை நிகழ்ச்சியை வழக்கம் போல பார்த்தேன். அதில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று நான் படித்த விஷயத்தினைப்பற்றியது.

கேள்வி இதுதான். வால்பாகத்தில் கொடுக்கு உள்ளது எது? கொடுக்கப்பட்ட பதில்கள்: சிலந்தி, தேள், தேனி மற்றும் ஒரு பூச்சி. சரியான பதில் இதில் தேள் என சொல்லப்பட்டது. சரியான விடையே, ஆனாலும் தேனிக்கும் வால் பாகத்தில் தான் கொடுக்கு உள்ளது. எனவே தேனி என்று பதில் சொன்னாலும் அதுவும் சரியான பதில் தான். இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? கண்டிப்பாக கேள்வி தயாரித்தவருக்கு தெரியவில்லை.


தேனீக்களைப்பற்றிய சில உண்மைகள்

தேனீக்கள் கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகளாக இவ்வுலகத்தில் இருந்து வருகின்றன. குளிர் காலத்தில் பூக்கள் பூக்காத போது அவைகள் தனது உணவுக்காக வேண்டி சேமித்து வைப்பதே தேன் ஆகும்.

எறும்புகளைப்போலவே தேனீக்களும் சமுதாயமாக வாழ்கின்றன. அவைகளில் ராணி, ஆண் மற்றும் வேலைக்காரர்கள் உண்டு.

ராணித்தேனி தான் மிகவும் பெரிய ஈ. அது இரண்டரை நாள் லார்வாவாக இருக்கும்போதே தெரிவு செய்யப்பட்டு கவனமாக வளர்க்கப்படுகிறது. 11 நாட்களுக்கப்புறம் அது வெளிவந்து சுமார் 18 ஆண் ஈக்களுடன் கூடி இனவிருத்தியில் ஈடுபடும். அந்த சமயத்தில் தனது வாழ்நாளுக்குத் தேவையான பல மில்லியன் விந்தணுக்க்களை சேமித்து வைத்துக்கொண்டு விடும்.

ஆண் ஈக்களின் வேலை இதைத்தவிர வேறு ஒன்றுமேயில்லை. சில சமயம் காலனியில் உணவு பற்றாக்குறையிருப்பின் இவை கூட்டிலிருந்து வெளியேற்றப்படுவது கூட உண்டு.

வேலைக்கார ஈக்கள் தான் கூட்டின் முதுகெலும்புகள் மாதிரி. இவையனைத்தும் பெண்களே, ஆனால் முட்டையிட முடியாத பெண் பூச்சிகள். 50,000 முதல் 60,000 வரையிலும் இதன் எண்ணிக்கை இருக்கும்.

இதன் வாழ்நாள் காலத்திற்கேற்றபடி மாறுபடுவதுண்டு. பொதுவாக 28 முதல் 35 நாள் வரை வாழும் இவைகள், சில சமயம் முழு குளிர்காலமும் வாழுவதுண்டு.

இவைகள் தான் ராணிக்கும் மற்ற லார்வாக்களுக்கும் உணவு கொண்டு வருகின்றன. காவல் காக்கின்றன. இவ்வளவு ஏன்? தனது இறக்கைகளால் கூட்டை குளிர்விக்கின்றன.

முக்கியமான ஒன்றான தேனை, இவைகள் மலர்களிலிருந்து எடுக்கும் மதுவிலிருந்து தயாரிக்கின்றன. மதுவை இந்த ஈக்கள் தனது வயிற்றில் சேமித்து வருகின்றன. கொண்டுவரப்படும் மதுவானது ஒவ்வொரு சிறிய அறைகளிலும் சேர்க்கபடுகிறது. சேர்க்கப்பட்ட திரவமானது ஈக்களால் ஈரப்பதம் போகவைப்பதற்காக ஆற்றப்படுகின்றன - இறக்கைகளால். இந்தத் திரவம் தான் தேன் - இதில் 80% தண்ணீர் மற்றும் தேன், 19% தண்ணீர்.

கதை எல்லாம் போதும் - கொட்டுவது எப்படி என்கிறீர்களா? நான் கொட்டு வாங்கியது இல்லை. யாராவது பாக்கியவான்கள் உண்டா?

0 Comments:

Post a Comment

<< Home