2006/02/22

கல்யாணம் ஆன பிரம்மச்சாரிகள்

இன்று அபுதாபியிலிருந்து ஒரு பனி சம்பந்தப்பட்ட செய்தி. துபாய் பனி ரசிக்கத்தக்கது, ஆனால் இதுவோ எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை. முக்கியமாக 'முன்பே சமைக்கப்பட்டு' கிடைக்கும் திடீர் உணவு சாப்பிட்டு அவசர வாழ்கையில் வாழும் மக்களுக்கு.

இந்த மாதிரி உறைய வைக்கப்பட்டு கிடைக்கும் 'திடீர் உணவு' வகைகளை ஒரு இந்தியர் (அதுவும் தமிழ்நாட்டுக்காரர்) ஒரு வருடமாக சாப்பிட்டு வந்திருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் எத்தனையோ 'கல்யாணம்' ஆன பிரம்மச்சாரிகளைப் போல (அப்பாடி, தலைப்பை ஒரு தடவையாவது உபயோகப்படுத்தியாகி விட்டேன்).

ஒரு மாதத்திற்கு 50 பாக்கெட்டுகள் வரை வாங்குவாராம். வேலை நிமித்தமாக ஊர் ஊராக சுற்றும் வேலை (உள்நாட்டிலேயே தான்). சிறிது நாட்களுக்குப் பிறகு தனது கால்கள் மற்றும் கைகள் மரத்துப்போன உணர்வு அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. முதலில் வேலைப்பளு காரணமாகத் தான் இப்படி இருக்கிறது என் நினைத்து வலி நிவாரிணிகளை சாப்பிட்டு இருக்கிறார். அப்புறம் நடக்கவோ நிற்கவோ கூட முடியாத நிலை வந்தவுடன் தான் (நம்ம போலத்தான் எல்லாரும் இருக்காங்க), எங்கேயோ பிரச்சினை என சந்தேகித்து மருத்துவமனையை அனுகிகியிருக்கிறார்.

முதலில் அவருடைய கால் நரம்பில்தான் ஏதோ பிரச்சினை என நினைத்த மருத்துவர்கள், பல விதமான பரிசோதனைகளுக்குப் பிறகு தான் உண்மையான நிலையை கண்டறிந்துள்ளனர்.

என்ன பிரச்சினை தெரியுமா? விட்டமின் B12 மிகக்குறைவாக உள்ளதே இதற்குக் காரணமாம். ஏனெனில், அவர் சாப்பிட்டு வந்த உறைய வைக்கப்பட்ட உணவுகளில் பதப்ப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட இரசாயனங்கள், அவரது உடம்பில் உள்ள B12 விட்டமினை கிரகிக்கும் செல்களை அழித்துவிட்டன. இதனால் தான் அவரது உடம்பில் சிறிது சிறிதாக விட்டமின் B12 குறைவு ஏற்பட்டு, இந்த நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பொதுவாக குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இந்தக் குறைபாடு எற்படுமாம்.

இப்போது அவர் வாரத்திற்கு ஒருமுறை B12 ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலமை.

இப்போதெல்லாம் அவர் இந்த உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

நீங்கள் சாபிடுபவர் என்றால், எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?

3 Comments:

At 10:53 AM, February 22, 2006, Blogger நன்மனம் said...

sir, unga post ethaiyume ennala padika mudiyala, enna font maathanum.

sridhar

 
At 7:40 AM, February 23, 2006, Blogger வெளிகண்ட நாதர் said...

உறைய வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் எப்பொழுதுமே உடல் நல்த்துக்கு கேடு விளைவிக்கும், பச்சை காய்கரிகளை வாங்கி வெண்ணீரில் சூடவச்ச சாப்டாலே போதும்!

 
At 10:07 AM, February 23, 2006, Blogger Unknown said...

சரியாகச் சொன்னீர்கள் நாதரே!

இந்த மாதிரி பயம் காட்டினாலாவது, சாப்பிடுவதை நிறுத்த மாட்டார்களா என்ற நப்பாசை தான்.

நன்றி!

 

Post a Comment

<< Home