சில நேரங்களில் சில கேள்விகள்
சில சமயத்திலே எதிர்பாராம ஒருத்தரை சந்திக்கும் போது, நம்ம மக்கள் இருக்காங்களே, எதுவோ கேட்கனுமேனு சில கேள்விகள் கேட்பாங்க பாருங்க, அது அசட்டுத்தனமான கேள்வின்னு தெரிஞ்சும்? கண்டிப்பா எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கும் (சொல்லியோ அல்லது கேட்டோ).
வேறு வழியில்லாம கேட்க வேண்டி இருக்கும் போது உங்களுக்குள்ளே சில பதில் சொல்லத் தோணி இருக்கா இல்லையா? அதிலே சில உதாரணங்கள் தான் கீழே! படிச்சிப் பார்த்துட்டு வேற ஏதாவது இன்னும் இருந்தா அல்லது அனுபவிச்சி இருந்தா எடுத்து விடுங்க!
(கலரில் இருப்பவை நாம் திருப்பி சொல்ல நினைத்தது)
சினிமா தியேட்டரில்:
யேய், இங்கே என்ன செய்யறே
சும்மா சினிமா பார்க்க வந்தேன்
உனக்கு தெரியாதா? இங்கே தியேட்டரில் பிளாக்லே டிக்கெட் விற்கிறேனே?
பேருந்தில்: நல்ல கட்டை வைத்த காலணியைப்போட்டு யார் காலையாவது மிதித்து விட்டு
ஸாரி, வலிக்கிறதா?
இல்லைங்க, பரவாயில்லை.
வலிக்கவே இல்லையே? நான் தான் அனஸ்தீஸியா போட்டுட்டு வந்திருக்கேனே, இன்னோரு தடவை மிதிக்கிறீங்களா?
இறுதிச்சடங்கில்:
எத்தனையோ பேரு இருக்கும் போது இவர் மட்டும், சே...
ஆமாங்க பாவம்.
ஏன், நீங்க போயிருக்காலம்னு சொல்றீங்களா?
உணவு விடுதியில்:
சர்வர், இந்த டிஷ் எப்படி இருக்கும்?
ரொம்ப நல்லா இருக்கும் சார்.
அதுவா, ரொம்ப மோசம் சார். எல்லாம் கலப்படத்திலே செஞ்சது. அப்பப்போ நாங்க எல்லாம் எச்சி கூட துப்புவோமே?
குடும்ப விழாவில், நெடுநாள் கழித்து பார்க்கும் அத்தை
டேய், எவ்வளோ பெருசா வளர்ந்துட்டே நீ?
ஆமாம் அத்தை.
ஆமா, ஆனா நீங்களும் ஒன்னும் சுருங்கி எல்லாம் போகலை.
கல்யாணத்தில், மணப்பெண்ணைப் பார்த்து
இந்தப்பையன் எப்படி? நல்ல பையன் தானே?
ஆமாம், ரொம்ப ரொம்ப நல்லவரு.
அவன் ரொம்ப மோசமானவன் தான், ஆனா நிறையப் பணம் வைச்சிருக்கான்னு தான் அவனை கட்டிக்கறேன்.
நடுராத்திரியில் 1 மணிக்கு, தூங்கிக்கொண்டிருக்கும் போது போன் அடித்து,
ஸாரி, தூங்கிட்டு இருந்தியா?
இல்லை பரவாயில்லை, சொல்லு.
தூக்கம் வரலே, அதான் கொசு கிட்டே அதோட வாழ்கையைப் பற்றி பேசிகிட்டு இருந்தேன்.
யாராவது முடி வெட்டிக்கொண்டு வருபவரை (அல்லது வருபவளை) பார்த்து:
என்ன முடி வெட்டிகிட்டியா?
ஆமா, நல்லா இல்லை?
இல்லையே, இது இலையுதிர்காலம் இல்லையா, அதான் தானா உதிருது.
பல் மருத்துவர் உங்கள் வாயில் கூரான ஆயுதத்தை வைத்துக்கொண்டு
வலிச்சா சொல்லுங்க, என்ன?
சரிங்க டாக்டர்.
வலிக்காது டாக்டர் - கொஞ்சூண்டு ரத்தம் மட்டும் தான் வரும்.
நீங்கள் சிகரெட் பிடிப்பவர் என்று தெரியாத உங்கள் 'மனம் கவர்ந்த' பெண்,
ஏய், நீ சிகரெட் பிடிப்பியா?
@#&(*%^
என்ன ஒரு அதிசயம் பாரேன், சாக்கை வாயிலே வைச்சிகிட்டு இருந்தேன், அதுவா தீப்பிடிச்சி எரிஞ்சிகிட்டு இருக்கு இப்போ?
5 Comments:
நடுராத்திரியில் 1 மணிக்கு, தூங்கிக்கொண்டிருக்கும் போது போன் அடித்து,
ஸாரி, தூங்கிட்டு இருந்தியா?
இல்லை பரவாயில்லை, சொல்லு.
தூக்கம் வரலே, அதான் கொசு கிட்டே அதோட வாழ்கையைப் பற்றி பேசிகிட்டு இருந்தேன்.
இதை வாசிக்கும் போது வாய் விட்டுச் சிரித்து விட்டேன்
வாங்க தைலு, வீட்டம்மா படிக்க மாட்டாங்களா இதை? அந்த தைரியம் தானே?
நன்றி சந்திரவதனா.... வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
>> @#&(*%^
என்னங்க... ஹிஹிஹினு அசடு வழிஞ்சதை விட்டுட்டு.. கோபப்பட்டு சொன்ன மாதிரி எழுதியிருக்கீங்க.. அவுங்க ப்ளாக் படிக்க மாட்டாங்கலா ? ;-)
வாங்க யாத்ரீகன்,
துபாய் வரைக்கும் வந்ததுக்கு நன்றி.
@#&(*%^ = அதுக்கு அர்த்தம், அவங்க அவங்க என்ன வேண்டுமோ அதைச் சொல்லிக்கலாம்னு தான். நீங்க என்ன செஞ்சி இருப்பீங்கன்னு இப்போ நல்லாவே தெரியுதே! ;)
பி.கு.: எங்கே, ஆளையே காணோம்? எப்போ மறுபடி எழுத ஆரம்பிப்பீங்க?
கோவிலில் பார்த்துவிட்டு....
என்ன சாமி கும்பிடவா?
ம்ம்ம்...இல்ல சாமிக்கு ஒரே இடத்தில இருந்து கால் வலிக்குதாம் அதான் நான் கொஞ்சநேரம் அவர் இடத்தில நிக்கலாம்னு வந்தேன்.
Post a Comment
<< Home