புஷ் - கருணாநிதி சந்திப்பு
சென்னை, இந்தியா, ஆசியா, உலகம்: தற்போது இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர், இந்தியா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு பேச வெறும் ஒரு ரூபாய் என்ற திட்டத்தினைக் கேள்விப்பட்டார். இதனால் பெரிதும் ஆச்சரியப்பட்ட அவர், இந்தத் திட்டத்திற்கு பின்னே யார் இருக்கிறார் என்பதை அறிய மிகவும் ஆசைப்பட்டதால், பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர் தயாநிதி மாறனை அறிமுகம் செய்துவைத்தார்.
அதிபரை தனியாக சந்தித்த தயாநிதி மாறனிடம், இந்த மகத்தான திட்டத்தினை அமெரிக்காவிலும் செயல்படுத்த வேண்டி இருப்பதால், அதன் ரகசியம் என்னவென்று புஷ் கேட்டதாகவும், அந்தத் தொழில்நுட்பத்தினைத் சொல்லித்தர வேண்டுமென்றால், தனது தாத்தா திரு. கருணாநிதியை புஷ் சந்தித்து ஆக வேண்டும் என மாறன் அன்பாக 'கேட்டுக்கொண்டதாக' தெரிகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் கருதி, புஷ் இந்த சந்திப்பிற்கு சம்மதித்தார்.
கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த புஷ்'க்கு மாலை முரசு, தமிழ்முரசு மற்றும் தினகரன் பத்திரிக்கைகளின் ஆயுள் சந்தா அளித்து மகிழ்ந்தார்.
சந்திப்புக்கு பிறகு நிருபர்களை சந்தித்த கலைஞரிடம் அவர்கள் என்ன பேசினார்கள் என்ற கேள்விக்கு, தேர்தல் கூட்டணி வைப்பது எப்படி என்று புஷ் கேட்டதாகவும் அதைப்பற்றியே பேச்சு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வரை ஏன் புஷ் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, மாறன் அவர்கள் அது அதிபரின் பாதுகாபு அதிகாரிகள் பொருத்த விஷயம், ஏனெனில் அங்கு செல்வது புஷ்ஷிற்கு பாதுகாப்பு இல்லை என அவர்கள் தெரிவித்ததாக அவர் நிருபர்களிடம் சொன்னார்.
நமது நிருபர் ஐடியா ஐயாச்சாமி
(கற்பனைச் செய்தி!)
5 Comments:
எப்பிடிய்யா இப்பிடியெல்லாம் எழுதறீங்க? :) முதல் பாராவ கொஞ்சம் நம்பிக்கையில்லாமதான் படிச்சேன். ரெண்டாவது பாராவிலயே குட்டு வெளிப்பட்டுடுச்சு. நீங்க //(கற்பனைச் செய்தி!)// இப்படில்லாம் போட்டாத்தான் நாங்க புரிஞ்சுக்குவோமா என்ன?
நன்றி VoW!
போலி டோண்டு மாதிரி யாராவது புஷ்'க்கு பரிஞ்சு வந்து என் கிட்டே சண்டை போட்டா? அதான் அப்படி ஒரு 'பாதுகாப்புக்குக்காக' எழுதினேன்!
அட நானும் உண்மைனு ஒரு நொடி ஏமாந்துட்டேன்.... புஸ்ஸோட நிலமை அவ்வளவு மோசமானு சிரிப்பு வந்திருச்சு முதல்ல.. :-))))
idli vadaiyudan potti nalla irukku.
நன்றி கீதா. போட்டி போடும் அளவுக்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. இட்லி எங்கே ... துபாய் எங்கே? ;)
ரசித்ததற்கு நன்றி யாத்ரீகன். பில் கேட்ஸ்ஸிற்கு வந்த நிலைமையை நினைத்தேன். கற்பனைக் கழுதை வெளியே வந்து விழுந்து விட்டது!
Post a Comment
<< Home