வெற்றியா? தோல்வியா?
ஒரு நடுநிலை ‘வியாதியாக’ இருப்பவனும் என்னைப்போலவே யோசித்திருப்பான் என நினைத்து எழுதும் பதிவு. இந்த ‘அரிசியலில்’ எல்லாம் எனக்கு அவ்வளவாக ஞானம் இல்லாவிட்டாலும் ஏதோ எனக்குப் பட்டதை முதல்முதலாக எழுதுகிறேன்.
திரு. கருணாநிதியை எனக்குப் பிடிக்காவிடினும் (காரணம் எல்லாம் தெரியாது) அவரது பழுத்த அரசியல் அனுபவத்திலும், வார்த்தை ஜாலத்தாலும் கவரப்பட்டவன் நான். ஆனால் அவர் மேல் நான் வைத்திருந்த மரியாதை - கலர் டி.வி.யால் கொஞ்சநஞ்சமும் இல்லாமல் காணாமல் போய் விட்டது. 2 ரூ. அரிசி வேண்டுமானாலும் ஏழை மக்களுக்கு நேரடியாக உதவும் என சொன்னாலும், டி.வி. என்பது நிறைய பேருக்கு பிடிக்காமல் போனது.
அப்போது கணிக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், ஜெ. அவர்களே முன்னிலையில் இருந்தார்கள். நிறைய பேர் அவரே மறுபடி ஜெயிப்பார் எனவும் நினைத்தார்கள். போன தடவை மேற்கொண்ட தனி மனித தாக்குதல் பிரசாரங்கள் எல்லாம் இல்லாமல், ஜெ. முன்வைத்த அரசின் சாதனைப் பிரச்சாரங்கள் நன்றாகவே எடுபட்டிருந்தாற்போலத் தான் இருந்தது. ஆனால்?
யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது போல, இவரும் இலவசங்களை வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியது தான் யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவெடுக்காமல் இருந்த மக்களை பாதித்தது என நினைக்கிறேன்.
இந்த இலவசங்களின் அறிவிப்பிற்குப் பிறகு நடந்த கருத்துக் கணிப்பில், நிலைமை தலைகீழாக மாறியது. அது மட்டுமல்லாமல், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பும் இம்மாற்றத்தையே காட்டுகிறது.
அதுவரை கலர் டி.வி.யைப் பற்றியும், அரிசியைப் பற்றியும் குறை சொல்லி வந்த வை.கோ. அடித்த பல்டி ஒரு முக்கிய காரணம் என்றாலும் மிகையாகாது. இம்மாதிரியான கொள்கை நிலைப்பாடு மாற்றங்களே இவர்களை தி.மு.க. பக்கம் சாய்த்து விட்டது என்றே சொல்லலாம்.
இது எனக்குத்தோன்றிய 'அரிசியல்' அலசல். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
54 Comments:
துபாயிலே இவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டு அரிசியல் பற்றி வந்து விடுகிறதா?
அட! இன்று இட்லி வடையின் வெற்றிடத்தை நீர் நிரப்பி விட்டீர்.
கலக்குங்க!
Vaanga... neenga thaan baaki..lastaa vanthaallum lastingaa oru post pottu irukeenga...
Yes U are correct in your analysis.. Jaya's Last minute doubts had lead her into hasty conclusions which jeopardised her chances.
Namma padhivu pakkam oru look vidunga
chennaicutchery.blogspot.com
கீதா மேடம், எங்கே இருந்தாலும் நாங்க 'சுத்த தமிழன்' தான். அரிசி மட்டும் தான் சாப்பிடுவோமில்லே? லேட்டா வந்ததை கிண்டல் எல்லாம் பண்ணாதீங்க. லேட்டா வந்தாலும், நாங்க லேட்டஸ்டா தான் வருவோம்.
தேவ், உங்க பதிவு நான் தினமும் தான் பார்க்கிறேன். நீங்க சொல்லித்தான் செய்யணுமா இதெல்லாம்?
சிபிக்கு என்ன இருந்தாலும் என் மீது இவ்வளோ கூடாது. இட்லி எங்கே நான் எங்கே? இதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஆமா, சொல்லிட்டேன்.
ஜெ-வின் கடைசி நேர இலவச அறிவிப்புகள், முக வின் இலவச அறிவிப்புகளுக்கு ஒரு நம்பகத்தன்மையும், ஜெ-க்கு தோல்வி பயம் வந்ததென்ற நினைப்பையும் தந்துவிட்டதோ?
//சிபிக்கு என்ன இருந்தாலும் என் மீது இவ்வளோ கூடாது//
இன்று இட்லி வடை பதிவு போட்டாலும் ஒரு பதிவு மட்டுமே போடமுடியும், மீண்டும் நாளைதான் என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலாக தாங்கள் ஒரு அரசியல் பதிவு போட்டிருந்தீர். அதுவும் முதல் முதலாக! அதை ஊக்குவிக்கும் (ஊக்கு விற்கும் அல்ல) விதமாகத்தான் அவ்வாறு பாராட்டினேன்.
சி.பி. உங்கள் ஊக்குவிப்பை நான் 'உள்குத்து' என நினைத்து பயந்து விட்டேன். வலைப்பதிவில் ஒரு கைப்பூ போதும் என்ற நல்ல எண்ணம் தான்! ;) உங்கள் ஊக்குவிப்பை தலைவணங்கி 'அடக்கத்துடன்' ஏற்றுக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் சுட சுட வரும் இட்லி போல ஆகுமா என்ற தன்னடக்கம் தான் சி.பி.
கிருஷ்ணா, அது தான் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும். எனினும், 11ஆம் தேதி வரை பொறுத்திருப்போம். தப்பித்தவறி முடிவு வேறு மாதிரி இருந்தால், இப்பதிவை கொஞ்சம் மாற்றி எழுதிவிடலாம்! ;)
அதிமுக தோல்வியில் (தோற்றால்) அதில் மதிமுக வின் நாஞ்சில் சம்பத், வைகோ இவர்களின் பங்கு முக்கியமானதாய் இருக்கும்.
//அதிமுக தோல்வியில் (தோற்றால்) அதில் மதிமுக வின் நாஞ்சில் சம்பத், வைகோ இவர்களின் பங்கு முக்கியமானதாய் இருக்கும்//
சும்மா இருந்தவங்களை கூப்பிட்டது யாரு? பழி போடறது யாரு?
ஏனய்யா? அவங்க பாட்டுக்கு 22,23 ன்னு சண்டை போட்டுகிட்டு இருந்தவங்களை 35 தற்றேன்னு கூப்பிட்டுட்டு இப்போ இது வேறயா?
துபாய் வாசி நல்ல அலசல்.
சிபி,
பாத்தீங்களா, நீங்க நல்ல எண்ணத்துல சொன்னா கூட இப்டி //ஊக்குவிக்கும் (ஊக்கு விற்கும் அல்ல)//விலக்கத்தோட போட வேண்டிய நிலமை. அதான் சங்கம், கழகம்னு போனாலே இப்படி தான் ஜாக்கறதயா எல்லா சைடும் பாத்து வேண்டி இருக்கும்.:-))
சிபி,
மனசு சொன்னது அதிமுக போட்ட பழியல்ல. நம்மைப் போன்ற நடுநிலை வியாதிகள் போடப்போகும் பழி. சரிதானே மனசு? ;)
நன்மணம்,
பாராட்டுக்கு நன்றி!
பொது வாழ்க்கை என வந்து விட்டால், இதெல்லாம் சகஜமப்பா! சிபிக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?
//சங்கம், கழகம்னு போனாலே இப்படி தான் ஜாக்கறதயா எல்லா சைடும் பாத்து வேண்டி இருக்கும்.//
என் மேலான கரிசனத்திற்கு நன்றி நன்மனம்.
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!
("சூரியன்" கவுண்டமணியை இங்கு நினைவு கூற வேண்டாம்)
//மனசு சொன்னது அதிமுக போட்ட பழியல்ல. நம்மைப் போன்ற நடுநிலை வியாதிகள் போடப்போகும் பழி//
அட, அடுத்த தேர்தல்ல கூட்டணி மாறினா அ.தி.மு.க காரங்களே சொல்லுவாங்க பாருங்க!
"கடந்த தேர்தலில் ம.தி.மு.க வுடன் மேற்கொண்ட தவறான கூட்டணியே
அ.தி.மு.கவிற்கு ஏற்பட்ட படு தோல்விக்கு காரணம் என்பதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.."
இப்படி அறிக்கை விடக் கூடும்.
உண்மை தான் சிபி.
எப்படிப்பட்ட அறிக்கைகள் என 11 ஆம் தேதி மாலையிலிருந்தே தெரிந்துவிடும்.
இப்படிப்பட்ட பல்வேறு அறிவிக்கைகள் தயார் நிலையில் இருக்கலாம், அல்லது தயாரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கலாம்.
இதுவும் கூட்டணியில் சகஜம் தானே? (சூரியன் கவுண்டமணிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை) ;-)
11-ம் தேதி காலை 10, 11 மணிக்குள்ளே எல்லாமே வந்து விடும். துபாயிலே அப்போதான் நீங்க பல் தேய்க்கலாமானு யோசிச்சுக்கிட்டு இருப்பீங்க.
கீதா மேம்,
அது என்ன தான் இருந்தாலும், வியாழக்கிழமை எல்லாம் துபாய்காரங்க பல் தேய்க்கறது இல்லை. எங்களுக்கு எல்லாமே வெள்ளிக்கிழமை தான். ஏன்னா அன்னிக்கு தான் இங்கே லீவ். :-))))
ஒரு வேளை 'நாங்க' நினைச்ச ஆளு ஜெயிச்சிட்டா, வியாழக்கிழமையே அது நடக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் 'வேட்பாளர்கள்' செயல்.
அம்மா ஏற்கனவே அப்படி சொன்னவர்கள் தான். சிபி நானும் வைகோவை ஒரு நாகரீகமான அரசியல்வாதி என்று நினைத்திருந்த்தேன் அவர் இந்த தேர்தலில் பேசிய விதம் அதை மாற்றிவிட்டது.
ஜெயா டிவியில் கூட ஆரம்பத்தில் அவரை காண்பித்த அளவு பிரச்சாரத்தின் இறுதியில் இல்லை.
சரி துபாய் வாசி....நீங்க சொன்னது.
டிஸ்கி/மு.கு: இப்பின்னூட்டம் இப் பதிவுக்குத் தொடர்பில்லாதது!
துபாய்வாசி,
அது ஏனோ உங்கள் பெயரைப் பார்க்கும்போது வந்தவாசி என்னும் ஊரின் பெயர் நினைவுக்கு வருகிறது, ஒவ்வொரு முறையும்.
:-)
சிபி
உண்மை தான் - நான் மட்டுமல்ல, இங்கு இருக்கும் அனைத்து மக்களும் - துபாய் 'வந்த' வாசிகள் தான்! ;-)
மற்றபடி, வந்தவாசிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
//துபாய் 'வந்த' வாசிகள் தான்!//
அட! நீங்களும் சிலேடைப் பேச்சுல கலக்குறீங்க!
இது ஏதோ அரசியல் பதிவுன்னாங்க.. பார்த்தா வந்த வாசி, துபாய்வாசின்னு ஒரே இலக்கியதினம் ஆய்க்கிட்டே இருக்கு.. :)
நன்றி சிபி!
பொன்ஸ், இது அரசியல் சம்பந்தப்பட்ட பதிவு என்றாலும், இங்கு வருகை தருபவர்கள் எல்லாம், இலக்கியவாதிகளாக இருக்கிறார்களே? (கவனிக்கவும், இலக்கியவாதிகள் தான், இலக்கிய'வியாதி'கள் இல்லை).
//(கவனிக்கவும், இலக்கியவாதிகள் தான், இலக்கிய'வியாதி'கள் இல்லை).//
எது எழுதினாலும் ஃபைனல் டச்ல கலக்கறீங்க துபாய்வாசி!
சிபி
உங்க சங்கத் தலைவர் பதவி காலியாவா இருக்கு? சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான்.
எதுக்கும் உஷாரா இருக்கறது நல்லது பாருங்க? ;-))
//உங்க சங்கத் தலைவர் பதவி காலியாவா இருக்கு? சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான்.//
இதெல்லாம் கொஞ்சம் ஓவர். தலை கொஞ்ச நாள் கட்சிப்பணிக்காக வெளியூர் போயிருக்கார்.
அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்னெல்லாம் கேக்கப்பிடாது.
//எது எழுதினாலும் ஃபைனல் டச்ல கலக்கறீங்க துபாய்வாசி!//
இப்படி உசுப்பேத்தி.. உசுப்பேத்தி... ஒருத்தர ஒதுக்கி அவரோட பேற மட்டும் உபயோகிச்சு விளையாடுறாங்க. ஆகையால் ஜாக்கிறதை துபாய்வாசி.:-))
நீங்க வேற, எனக்கு அதுக்கெல்லாம் ஆசை இல்லை. சரியா படிக்கலியா "எதுக்கும் உஷாரா இருக்கறது நல்லது பாருங்க?".
அப்படி ஏதும் நடந்தா, துபாய் பாலைவனத்திலே போயி ஒளிஞ்சிக்கலாம்னு தான் இந்தக் கேள்வி.
//இப்படி உசுப்பேத்தி.. உசுப்பேத்தி... ஒருத்தர ஒதுக்கி அவரோட பேற மட்டும் உபயோகிச்சு விளையாடுறாங்க. ஆகையால் ஜாக்கிறதை துபாய்வாசி//
இப்போ புரிகிறது துபாய்வாசி!
:-)))))
அப்பாடா, மறுபடியும் அரசியல் பதிவாகிவிட்டது :)
பொன்ஸ்
உங்க எண்ணம் நிறைவேறிடுச்சே? சந்தோஷமா இருங்க!
//மறுபடியும் அரசியல் பதிவாகிவிட்டது //
இதுக்குக் காரணம் உங்களுக்கு தற்போது பீடித்திருக்கும் அரசியல் வியாதிதான் காரணம் துபாய்வாசி!
//இதுக்குக் காரணம் உங்களுக்கு தற்போது பீடித்திருக்கும் அரசியல் வியாதிதான் காரணம் துபாய்வாசி!//
சிபி - அரசியல் பதிவா மறுபடி மாறிடிச்சின்னு சந்தோஷப்பட்டது பொன்ஸ். நீங்க எனக்கு வியாதின்னு சொல்றீங்க? "இதுக்குக் காரணம் உங்களுக்கு தற்போது பீடித்திருக்கும் அரசியல் வியாதிதான் காரணம் பொன்ஸ்!" என்று இருக்க வேண்டுமே?
மன்னிக்கவும், பொன்ஸ் ஏற்கனவே ஒரு அரசியல் வியாஸ்தியஸ்தர்தான்.
உங்களுக்குதான் அரசியல் புதுசு! நீங்களே சொல்லியிருக்கிறீர்.
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
புதுசாக அரசியல் பற்றி பேச வந்தால், எனக்கு ஒரு முத்தின வியாதியஸ்தர் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கும் உங்களது எண்ணம், வலைப்பதிவாள கண்மணிகளிடம் செல்லாது என்பதை சவாலாக தெரிவித்துக்கொள்கிறேன்.
:----))))
//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
புதுசாக அரசியல் பற்றி பேச வந்தால், எனக்கு ஒரு முத்தின வியாதியஸ்தர் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கும் உங்களது எண்ணம், வலைப்பதிவாள கண்மணிகளிடம் செல்லாது என்பதை சவாலாக தெரிவித்துக்கொள்கிறேன்.
:----))))
//
இந்த ஒரு அறிக்கை சொல்லுதே!
உங்களுக்கு எந்த அளவு அரசியல் வியாதி முத்திடுச்சுன்னு!
என்னைப்பழுத்த அரசியல் வியாதியாக காட்டி, தலைமைச் சுமையை என் தலையில் சுமத்த நடக்கும் சதியென எமது ஒற்றர் படைத் தலைவர் 'நன்மணம்' தெரிவிக்கிறார்.
//...சதியென எமது ஒற்றர் படைத் தலைவர் 'நன்மணம்' தெரிவிக்கிறார்....//
அது யாருங்க அது எனக்கு போட்டியா?
பின்னூட்டத்துக்கு ஆளு குறையுதுனு ஆளு சேக்க நடக்கற வேலை மாதிரி தெரியுது?
:-))
இது "நன்மனம்" அந்த "நன்மணம்" யாருனு இப்ப தெரிஞ்சாகனும் சொல்லிப்புட்டேன்.
இப்படி நீங்களாகவே வந்து 'நான் இல்லே நான் இல்லே'னு கத்தினா, மத்தவங்க கண்டு பிடிச்சிடப்போறாங்க நன்மனம்! (இப்போ சரியாப்போட்டுட்டேன்!).
ஒற்றர் தலைவர் இப்படி வெளிப்படையா வரலாமா? அப்படியே வந்தாலும், இப்படி பின்னூட்ட ரகசியங்களை எல்லாம் வெளிப்படையாக சொல்லலாமா?
எழுதிய பதிவை விட்டுட்டு என்னென்னமோ போகுது கதை. எல்லாம் இன்னைக்கு வரைக்கும் தான். நாளைக்கு எல்லாரும் ஜூட் - தேர்தல் முடிவுகளில் முழுகியிருப்பாங்க. அதுவரைக்கும் ensoyyyyyyyy!
நீங்க பாட்டுக்கு பேர தப்பா சொல்லிட்டு ஒற்றர் தலைவருக்கு தர வேண்டிய "மறியாதைய" தர மாட்டேன்னு சொல்லிட்டா? அதனால தான் "ரிஸ்க்" எடுத்து ஒத்த தலய வெளிய காட்ட வேண்டியதா போய்டிச்சு:-))
வெள்ளிக்கிழமை மட்டும் பல் தேய்க்கும் துபாய் வாசியே, மெது மெதுவாக எங்க சங்கத் தலைமைக்குக் குறி வைக்கறீங்க போல இருக்கு. சங்கத்தின் நிரந்தரத் தலைவலி (சீச்சீ இந்த பார்த்திபன் சொல்லிச் சொல்லி அப்படியே வருது.)நிரந்தரத் தலைவி நான் இருக்கும் வரை நடக்காது. ஓடி விடும். தலைவரையே காணோம் பாருங்க கொஞ்ச நாளா.
ஒற்றர் தலைவராச்சே, சூசகமா சொன்னா புரிஞ்சிப்பீங்கன்னு பார்த்தா, எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு நீங்களா மாட்டிகிட்டீங்களே நன்னு (இது இன்னும் நல்லா இருக்கே?).
கீதா, சங்கத்துக்கு தலைவலி - சே, தலைவி எல்லாம் இருக்காங்களா? சொல்லவே இல்லையே?
தெரிஞ்சிருந்தா வெள்ளிக்கிழமை மட்டும் பல் தேய்ச்சி, சங்கத்தலைவர் ஆகும் தகுதிக்கு என்னை தயார் படுத்தி இருக்க மாட்டேனே? ஒரு தலைக்கு ஒரு வலியே போதும்'னு இருந்திருப்பேனே! சே சே, நேரம் எல்லாம் வேஸ்ட்.
அப்ப கூட அந்த "மரியாதைய" பத்தி பேச மாட்டேங்கரீங்களே.:-((
என்னங்க துபாய்வாசி, உங்க புண்ணியத்துல துபாய் கிளை ஆரம்பிச்சு உங்களைத் தலைவராப் போடலாம்னு அடுத்த கூட்டத்துல முன்மொழியலாம்னு நினைச்சேன். இப்படி ஒரேடியா பின் வாங்குறீங்களே.. (ஆகா, 'ஊக்கு'விற்பதற்கும், 'பின்' வாங்குவதற்கும் எப்படி ஒரு இலக்கியப் பொருத்தம்.. திரும்பி இலக்கியப் பதிவாய்டும் போலிருக்கே.. )!!!
"நன்னு" என்றழைத்தே "மிகப்பிரிய" மரியாதையில்லையா நன்ஸ்? [ இது இன்னொன்று ;-) ]
பொன்ஸ், உங்களைப்போன்றவர்கள் ஆதரிப்பீர்கள், ஆனால், தலைவிக்கு (கீதா) தான் மட்டுமே அகில உலக தலைவலியாக இருக்க ஆசையிருக்கிறதே? நான் என்ன செய்வேன்?
உங்களுக்கு இலக்கியம் ஒடம்புலே ரத்தமா ஓடுது. அதை பின் - ஊக்கு'ன்னு சொல்லி, மத்தவங்களுக்கும் குத்தி 'இரத்தம்' வர வைச்சிடாதீங்க பொன்ஸ்! பாவம் நாங்க!
நம்ம இரத்தத்துல இரும்புச் சத்து குறைவா இருக்குன்னு நேற்றைக்குத் தான் டாக்டர் (ப.ம.க டாக்டர் இல்ல.. நெசமாலுமே டாக்டர்) சொன்னாரு.. அதான், ஊக்கு, பின் எல்லாம் போட்டு இரும்புச் சத்தை அதிகமாக்குறேன்..
சிரிப்பி விட்டுப் போச்சு :) :)
பொன்ஸ், உங்களுக்கு இரும்புச் சத்து குறை என்றால், அனைவருக்கும் குறை என்று நினைத்து, ஊக்கும், பின்னும் விற்கும் உங்கள் உங்கள் 'பொன்' மனது பல்லாண்டு வாழ்க!
(இரும்புச்சத்துக்கு மிகச் சிறந்தது பேரீச்சை, நிறைய இருக்கு துபாயிலே. ஊக்கு/பின் எல்லாம் சாப்பிட்டு உடம்பை துருப்பிடிக்க வைச்சிக்காதீங்க).
//(ஆகா, 'ஊக்கு'விற்பதற்கும், 'பின்' வாங்குவதற்கும் எப்படி ஒரு இலக்கியப் பொருத்தம்.. திரும்பி இலக்கியப் பதிவாய்டும் போலிருக்கே.. )!!!
நிஜமாவே எனக்கு உடம்பு புல்லரிச்சுப் போய் கண்ணுல தண்ணியா வருது பொன்ஸ்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
//பொன்ஸ், உங்களுக்கு இரும்புச் சத்து குறை என்றால், அனைவருக்கும் குறை என்று நினைத்து, ஊக்கும், பின்னும் விற்கும் உங்கள் உங்கள் 'பொன்' மனது பல்லாண்டு வாழ்க!//
தன்னைப் போலவே பிற உயிர்களையும் பாவிக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்!
மறுபடியும்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
அரை சதம் அடித்த துபாய்வாசிக்கு ஒரு பெரிய கை (அதாங்க "give him a big hand") கொடுங்க.
துவா(இது கூட நல்லாருக்கு இல்ல) கிரிக்கட்ல மொத பால்ல அவுட் ஆனதுக்கு இது பிராயசித்தம்.
டமால்...டமால்....
துவா: இனிமே இப்படி பப்ளிக்கா சொல்லுவியா?
நன்ஸ், எந்த கையா இருந்தாலும், அது அடிக்காத வரைக்கும் சரி!
(50 ஆயிடிச்சா! சம்பந்தமே இல்லாம பதிவு பண்ணி ஒரு சாதனை செய்ய வைச்சிருவீங்க போல இருக்கே?).
துவா - சூப்பர் அப்பு. அதுக்கு அர்த்தம் வேற இருக்கு - பிரார்த்தனை என. அந்த அர்த்தத்திலே எடுத்துக்கிட்டா, டபுள் ஓகே!
துவா வா? என்னது இது, ஓரசைச் சீராக்கிட்டீங்க!!!
ஸ்ரீதர், உங்களுக்கும் எங்க சங்கத்துல பதவி குடுத்திருக்கோம், இங்க வந்து பாருங்க :)
வாழ்த்துக்கள் துபாய்வாசி! எப்படி 50வது பின்னூட்டம் கலக்கலா போட்டனா?
Post a Comment
<< Home