2006/06/14

கடவுள் செய்த பாவம்!

என்னைக்கவர்ந்த பாடல். என்ன படம் எனத்தெரிந்தவர்கள் கூறவும்.

எப்போதுமே உலக நிகழ்வுகளுக்கு ஒத்துப்போவதால் என்பதாலா அல்லது MGR பாடல் என்பதாலா எனத் தெரியாது. ஆனால் மிகவும் பிடிக்கும்!

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
இந்த மனிதன் கொண்ட கோலம்

பொருளேதும் இன்றி கருவாக வைத்து
உருவாக்கி வைத்து விட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதையின்றி
இடம் மாற்றி வைத்துவிட்டான்

கடவுள் செய்த பாவம்……..

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும்போதும் தெரிவதில்லை
பாழாய்ப்போன இந்த பூமியிலே

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்குப் பின்னால் சீறும்
முகத்துதி பேசும், வளையும், குழையும்
காரியம் ஆனதும் மாறும்
காரியம் ஆனதும் மாறும்

கடவுள் செய்த பாவம்……..

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ்ஜாதி
படைத்தவன் பெயரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
படைத்தவன் பெயரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே

நடப்பவை யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்?
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும்
உலகம் உருப்படியாகும்!


கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
இந்த மனிதன் கொண்ட கோலம்

படம்: தெரியவில்லை (MGR நடித்தது)
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

10 Comments:

At 1:42 PM, June 14, 2006, Blogger வவ்வால் said...

நல்ல பாடல் ,எம்.ஜி,ஆர் பாடல்களில் ஆர்ப்பாட்டமான பாடல்களே மீண்டும் மீண்டும் கேட்க கிடைப்பதால் இந்த பாடல் இந்த பாடலை நானும் இது வரைக்கேட்டதில்லை படமும் தெரியவில்லை. பதிவில் போட்டு அனைவரும் தெரிந்துகொள்ள வழி செய்துள்ளீர்கள்.

யாராவது தீவிர எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் வந்து படம் பேர்சொல்கிறார்களா பார்ப்போம்!

 
At 1:44 PM, June 14, 2006, Blogger Unknown said...

நன்றி வவ்வால்!

இப்பாடலை பல முறை கேட்டுள்ளேன். படம் பெயர்தான் தெரியவில்லை. யாருக்காவது தெரிகிறதா என பார்ப்போம்.

 
At 2:52 PM, June 16, 2006, Blogger கதிர் said...

கண்டுபிடிச்சிட்டென் துபாய்வாசி அவர்களே. அம்மாடி இதை தேடி கண்டுபிடிக்கறதுக்குள்ள தாவு தீந்திடுச்சு. இருந்தாலும் தேடுறதுல எப்பவுமே ஒரு சுகம் இருக்கும் எனக்கு அதுவும் இன்டெர்நெட்ல தேடணும்னா கேக்கவே வேணாம். இரண்டு மணி நேர தேடலுக்கு பிறகு கிடைச்சுது. படம் பேரு நாடோடிமன்னன். பாடலை பதிவிறக்கம் செய்ய www.indiamoviezone.com என்ற தளத்தில் பெயரை பதிவு செய்துவிட்டு செய்யலாம்.

 
At 2:14 PM, June 17, 2006, Blogger Unknown said...

தம்பி!

என்னிடம் நாடோடி மன்னன் படம் DVD இருக்கிறது - அதில் இப்பாடல் இல்லை என எனக்குக் கண்டிப்பாக தெரியும்! அவ்வலையகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தவறான தகவல்!

எனினும் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.

வேறும் யாருமே உதவமாட்டீர்களா ஐயா?

 
At 3:03 PM, June 17, 2006, Blogger கதிர் said...

தவறான தகவலுக்கு மன்னிக்கவும். அந்த தளத்தில் நாடோடி என்று மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார்கள் நானே அது நாடோடி மன்னனாக இருக்குமோ என்று ஒரு நினைப்பில் சொல்லி விட்டேன். ஒருவேளை அது நாடோடி என்ற படமாக இருக்குமோ?. தங்களது மின்னஞ்சல் முகவரி தந்தீர்களானால் அந்த பாடலையே அனுப்புகிறேன். இதுவும் தவறான தகவலாக இருந்தால் மன்னிக்கவும்.

தம்பி

 
At 3:55 PM, June 17, 2006, Blogger Unknown said...

நன்றி தம்பி!

நீங்கள் சொல்லியது போல நாடோடி படப்பாடலாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

உங்கள் முயற்சிக்கும் மிக்க நன்றி.

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நீங்கள் ஏதும் தவறு செய்யவில்லை, எனவே அதற்கு அவசியமே இல்லை!

 
At 5:05 PM, June 17, 2006, Blogger சிறில் அலெக்ஸ் said...

நாடோடி படப் பாடல்தான்...

http://www.musicindiaonline.com/p/x/vqvgjsjyoS.As1NMvHdW/

 
At 4:15 PM, June 18, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

//எப்போதுமே உலக நிகழ்வுகளுக்கு ஒத்துப்போவதால் என்பதாலா//

//கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ்ஜாதி
படைத்தவன் பெயரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே//

துவா,
நிஜமாவே அரசியல் வியாதி ஆய்ட்டீங்களா?? :))))

 
At 4:15 PM, June 18, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

//எப்போதுமே உலக நிகழ்வுகளுக்கு ஒத்துப்போவதால் என்பதாலா//

//கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ்ஜாதி
படைத்தவன் பெயரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே//

துவா,
நிஜமாவே அரசியல் வியாதி ஆய்ட்டீங்களா?? :))))

 
At 7:27 AM, June 19, 2006, Blogger Unknown said...

பொன்ஸ்

நீங்க ஒருத்தர் தான் நான் இந்தப்பாட்டைப் போட்டதற்கான உண்மையான காரணத்தை புரிந்து கொண்டீர்கள் (கொஞ்சம் தாமதமானாலும்!).

நீங்களும் அரசியல் வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறீர்கள் என இதிலிருந்தே தெரிகிறதா?

 

Post a Comment

<< Home