நீங்கள் கருப்பா?
அட தப்பா எடுத்துக்காதீங்க! இது இனவெறி சம்பந்தப்பட்ட பதிவு இல்லை.
பூக்களில் எத்தனையோ நிறம் இருப்பது போல, வலைப்பூக்களின் வண்ணங்களும் ஏராளம் ஏராளம். அவரவர் அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்களின் பதிவுகளின் வண்ணங்களை அமைத்துள்ளனர்.
ஆனால், கருப்பு பலகையில் எழுதியதைப் போன்று இருக்கும் சில வலைப்பூக்களைப் படிக்க சிரமம் இருக்கிறது. கருப்பு வெள்ளை எழுத்துக்கள் அழகாகத்தான் இருக்கின்றன. அதை படித்து முடித்து மற்ற ஒரு பதிவையோ அல்லது வேறு ஒரு வலையகத்தையோ பார்க்கும் போது, அது கண்களுக்கு மிக வேலையைக் கொடுக்கிறது. கண் சுருங்கி விரிவதால் அதற்கும் கஷ்டம் (strain) தானே? இம்மாதிரி எழுதுபவர்கள் எல்லாரும் நன்றாக வேறு எழுதுகிறார்கள் - படிக்காமலும் இருக்க முடிவதில்லை. குறைந்தது இந்த வண்ணத்தை மாற்றினார்களேயானால், கொஞ்சம் நல்லது - என்னைப்போன்ற 'மிருதுவான' கண் கொண்ட எத்தனையோ பேருக்கு!
இது ஒரு வேண்டுகோளே, கட்டாயம் இல்லை. முடிந்தால் வண்ணத்தை மாற்றுங்கள், இல்லாவிட்டாலும் உங்கள் வலைப்பூ படிக்கப்படுமே!
பி.கு. : பூக்களில் கூட கருப்புப்பூ ஏதும் இல்லையாம்!
28 Comments:
நானும் என் டெம்ப்லேட்டை வைச்சு ரொம்ப சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன்.. மசிய மாட்டேங்குதுங்க.. வேலை எடத்துல ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்பது வேற ஒரு கஷ்டம்... எப்படியாவது மாத்திரலாம்..
வாங்க யாத்ரீகன்
முயற்சி ஏற்கனவே இருக்கா? அப்போ என்னோட வேண்டுகோளும் சேர்ந்து சீக்கிரம் மாத்திடுவீங்க!
நன்றி!
நான் கருப்புதாங்க ஆனா என்னோட வலைப்பக்கம் வெளிர் நீலம். இந்த கலர்ல அந்த டெம்பிளேட்ட மாத்த நான்பட்ட பாடு மறக்காதுங்கோவ்........:))
எப்படியோ மாத்திட்டீங்களே மகேந்திரன். அதுவரைக்கும் சந்தோஷமே!
(நீங்க கருப்புன்னு சொன்னீங்களே, Fair & Handsome போடலியா?)
/ Fair & Handsome/ அப்டீன்னா ? :))
மகேந்திரன்
நம்மள மாதிரி கருப்பான ஆம்பளைங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான பிரத்யேகமான அழகு கிரீம். வாங்கி பூசுங்கப்பூ.
ஐ ஐ கருப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலர்.... பாத்து துபாய்வாசியார் யாராவது அப்படி பாடிடப் போறாங்க:)
தேவ்,
அவங்களுக்கு அப்படி புடிச்சி இருக்கவே தான் அந்த கலர் போட்டு இருக்காங்க! அதான் ஐஸ் வைச்சி இருக்கோம்லே (நல்ல எழுதறாங்கன்னு). மாத்திடுவாங்க (ஒருத்தராவது!).
வணக்கம் துபை வாசி!
இந்த கருப்பு வண்ணம்படிக்க கஷ்டம் தருகிறது என சில பதிவர்களிடம் பின்னூட்டத்திலே சொல்லி இருக்கிறேன் ,மாற்ற மனம் இல்லையோ அல்லது மாற்ற ஏற்படும் நேர விரயம் அல்லது இந்த வருகையாளர் எண்ணிக்கை காட்டும் கவுண்டர் போன்றவை மாற்ற விடாமல் தடுக்கிறதா எனத்தெரியவில்லை. சிலருக்கு அடுத்தவர்கள் செய்ய சொன்னால் பிடிக்காது ,அப்படி ஏதாவது இருக்கலாம். எதுக்கும் நீங்க நிறைய கேரட் சாப்புடுங்க கண் நல்லா தெரியுமாம் :-))
பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்வி, தமிழ்மணம விற்பனைக்கு என முகப்பில் ஒரு செய்தி நண்டு போல ஊர்கிறது, ஏதாவது மேல் விபரம் தெரியுமா?எதனால் இப்படி என்று?
நன்றி வவ்வால் (என்ன ஒரு பெயர்?).
அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றை நமக்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என கட்டாயம் இல்லையே? மாற்றினால் நாம் மகிழ்வோம்!
(தமிழ்மணம் விற்பனைக்கு என புரிந்த்ததைத்தவிர, வேறு ஒன்றும் எனக்கு தெரியாது! காசியிடம் கேட்க வேண்டிய கேள்வியினை துபாயிடம் கேட்கிறீர்களே?).
ஒரு மாதிரி கரும்பச்சை- கருநீலத்தில் குட்டி குட்டி எழுத்தோட ஒரு டெம்ப்ளேட் இருக்குங்க.. அது இன்னோர் பெரிய கொடுமை.
கருப்பு வெள்ளையாவது கொஞ்சம் ஐ பெரிசு பண்ணி பார்க்கலாம்.. இந்த பச்சை- நீலத்தில் வெள்ளையில் எழுதி இருக்கும் எழுத்துக்கள் ரொம்ம்ம்ம்ம்ப ச்சின்னது.. படிக்கவே முடிவதில்லை :(
அப்புறம், வவ்வால், //சிலருக்கு அடுத்தவர்கள் செய்ய சொன்னால் பிடிக்காது ,அப்படி ஏதாவது இருக்கலாம். // தலைவா.. எல்லாரையும் நம்மப் போலவே நினைச்சா எப்படி?!! :)
வாங்க பொன்ஸ்
நீங்களும் பாதிக்கப்பட்டு இருகீங்களா? விட்டா இதுக்குக் கூட ஒரு கூட்டணி அமைச்சிடலாம் போல இருக்கே?
வலைப்பூவை நிறைய பேர் படிக்கனும்னு ஆசை மட்டும் எல்லோருக்கும் இருக்கு. அதை வசதியாக்க மட்டும் செய்யமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் (வசதியில்லை என சொல்லியும்?). பார்ப்போம் - எத்தனை பேர் மாற்றுகிறார்கள் என்று!
துபாய் வாசி,
என்னுடைய ப்ரியன் கவிதைகள் வலைப்பூ கருப்பு நிறத்தில்தான் இருந்தது உங்களைப் போன்ற சில நண்பர்களின் யோசனை மற்றும் அறிவுறுத்தலால் அதை ஒரு மாதம் முன்புதான் நிறம் மாற்றினேன்.
எங்களைப்போன்றவர்களின் சிரமத்தினை மனதில் கொண்டு, எங்கள் குரலுக்கு செவி சாய்த்ததற்கு நன்றி ப்ரியன் (நல்ல பெயர்!).
அம்மா பொன்ஸ்!
என்னைப்(உன்னை) போலவா எல்லாம்னு கேட்கிறாப்போல இருக்கே அந்த நம்மைப்போல :-))
பொன்ஸ்,
உங்களுக்கு பதவி உயர்வா? சொல்லவே இல்லையே? (அக்காவிலிருந்து அம்மா!).
மாத்திடுறேன்...ஓக்கே...!!!
நீங்க நீலாமாச்சே ரவி?
கருப்பு அளவுக்கு உங்களது அவ்வளவு மோசமில்லை, எனினும் நன்றி!
துவா, என்னோட லிஸ்ட்ல ரவியோட டெம்ப்ளேட்டும் இருக்குங்க.. அவரே மாத்தறேங்கிறாரு.. நீங்க வேற..
அப்புறம், அக்கா, அம்மா எதுவுமே நிரந்தரம் இல்லை :). அடுத்து யாராவது புது பதிவர் வந்து பாட்டின்னு சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை :)
மத்தவங்க அக்கான்னு கூப்பிட்டா (அதாங்க நான்) சங்கத்து ஆளுங்க மட்டும் தான் கூப்பிடனும்'னு சொல்லிட்டு, சங்கத்து ஆளுங்க பாட்டின்னு கூட கூப்பிடலாம்'னு சொல்றது கொஞ்சம் கூட நல்லாயில்லை, ஆமா சொல்லிட்டேன் பொன்ஸ்!
துவா,
அரசியல் பண்றதுலயே இருங்க.. வவ்வால் எந்த சங்கம் கட்சியிலும் சேர மாட்டாரு.. அவரு ஒரு தனி வவ்வால் (தனி ஆள் மாதிரி) :)
யப்பா.. ரொம்ப நாளா தண்ணிகாட்டிட்டு இருந்த வேலை .. ஒருவழியா முடிஞ்சது... :-D , இப்பொ நம்ம வூடு கொஞ்சம் படிக்குறாப்ல இருக்குனு நெனைக்குறேன்.
>>நன்றி ப்ரியன் (நல்ல பெயர்!).
ப்ரியனோட புனைப்பெயருக்கு பின்னாடி ஒரு அழகிய கவிதைத்தொடர் இருக்கு.. , அது அவர் ரொம்ப முன்னாடி எழுதிவந்தது... ;-)
இணைய நாரதர்(தி) னு கூப்பிடுங்க, சந்தோஷபடுவாங்க பொன்ஸ்.(ஆஹா... மீண்டும் ஒரு பதிவுக்கு சம்பந்தம் இல்லாத மறுமொழி)
என்னுடைய (மற்றும் என்னைப்போன்ற பலரின்) வேண்டுகோளுக்கிணங்க வண்ணத்தை முதல்முதல் மாற்றிய யாத்ரீகன் வாழ்க!
மனசு - என்ன இவ்வளவு நேரம் கழிச்சி வரீங்க? இருந்தாலும் நீங்க ரொம்ப லேட்!
இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா !!!! :-)
அம்மா பொன்ஸ்!
//அரசியல் பண்றதுலயே இருங்க.. வவ்வால் எந்த சங்கம் கட்சியிலும் சேர மாட்டாரு.. அவரு ஒரு தனி வவ்வால் //
நல்லா சொன்னிங்க போங்க... சிங்கம் எப்போதும் சிங்கிலா தான் வரும் :-))
நான் தனியா வந்தாலும் தனி ஆள் கிடையாது!(எல்லாம் தமிழ்படம் பார்த்து வந்த பன்ச் டயலாக் தொத்துவியாதி தான்:-)) )
வவ்வால்,
நீங்க வவ்வாலா சிங்கமா? (நாயகன் கமலிடம் கேட்கப்பட்ட தொனியில் படிக்கவும், ஆனால் தெரியாது என அவர் சொன்ன மாதிரியே சொல்லக்கூடாது!).
துபாய்வாசி,
கறுப்பு ரோஜா இருக்கிறது. பங்களூரில். நாஞ்சில் மனோகரன் ஒருமுறை அதில் மாலை கட்டித் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்குக் கொடுத்ததாகப் பேப்பரில்ல் படித்திருக்கிறேன்.
Post a Comment
<< Home