சொர்கத்துக்குப் போகிறேன்!
வேறு ஒன்றுமில்லை - கோடை விடுமுறைக்காக சென்னைக்குப் போகிறேன். துபாய்வாசி கொஞ்ச நாள் சென்னைவாசியாக இருந்து விட்டு வருகிறேன்.
இராமராஜன் 'ஸ்டைலில்' சொல்லலாம் என்று தான் இத்தலைப்பு.
எத்தனையோ பிரச்சினைகள் - விமான நிலையத்தில் தொடங்கி, பேருந்தில் இடிபட்டு, ஆட்டோ ஓட்டுநர்களிடம் சண்டை போட்டு, இரங்கநாதன் தெருவில் நுழைய கஷ்டப்பட்டு, பின்னர் நுழைந்தபின் ஏண்டா நுழைந்தோம் என நினைத்து - என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா? ஆயிரம் தான் இருந்தாலும்................. ஆயிரத்து ஒன்னு ஆகுமா?
சாத்தான் ஊருக்கு போறாரு, நிலவு நண்பன் ஊருக்கு போறாரு, நாம மட்டும் இங்கே என்ன செய்யறதுனு தான் நானும் கிளம்பிட்டதா நினைக்க வேண்டாம். எல்லாம் திட்டமிட்ட விடுமுறை தான். ( திட்டமிடாவிட்டால், இக்கோடைக்காலத்தில் விமானத்தில் இடமும் கிடைக்காது என்பது வேறு விஷயம்).
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோரும் எழுதத்தான் போறீங்க. எழுதுங்க, ஆனா என் கிட்டே இருந்து பின்னூட்டம் எல்லாம் எதிர்பார்க்காதீங்க! அப்படியும் யாருக்காவது கிடைத்தால், அவர்கள் எல்லாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என் நினைத்துக்கொள்ளலாம் (இல்லை எனக்கு சென்னைக்குப் போயும் புத்திவரவில்லை எனவும் நினைத்துக்கொள்ளலாம் அல்லது இவன் சென்னையில் இருந்தாலும் துபாயில் இருந்தாலும் தொந்தரவு மட்டும் நம்மை விடுவதில்லை எனவும் நினைத்துக்கொள்ளலாம்)).
வர்ர்ர்ர்ர்ட்டா?
எச்சரிக்கை: போயிட்டு வந்து அடிபட்ட, இடிபட்ட அனுபவம் ஏதாவது இருந்தால் எழுதுவேன்!
24 Comments:
து.வா.
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
நன்றி நன்னு!
முதல் வாழ்த்து சொன்ன உங்கள் நன்மனம் வாழ்க!
பயணமும் விடுமுறையும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்...
நன்றி ஓசை.
நேத்து, ஆசிப்பு, இன்றைக்கு நீங்க ம்ம்ம்ம் .. ஊரே காலியாயிக்கிட்டு இருக்கு, நாங்க ஜூலைலத்தான் போகிறோம் . சென்று வருக, வென்று வருக :-)
நன்றி உஷா!
ஆனா நீங்க பெருமூச்சு விட்டு சொல்றத பார்த்தா, என்னவோ ஜூலை வருவதற்கு இன்னும் 2 மாசம் இருக்கற மாதிரி இருக்கே? இன்னும் 9 நாள் தான். அது வரைக்கும் துபாயை பார்த்துக்கோங்க.
நம்மூருக்கு வர்ரீங்களா.. நல்லா விடுமுறைய சந்தோசமா களியுங்க.. இந்த ப்ளாக் என்ன கணிணி பக்கமெல்லாம் வரவேணாம்... :-)
யாத்ரீகன்,
கணினி பக்கமெல்லாம் வராமல் இருக்க முடியாது. வலைப்பூ பக்கம் வராமல் இருக்க முடியுமான்னு தான் தெரியலே, என்றாலும் முயற்சிக்கிறேன்.
//அப்படியும் யாருக்காவது கிடைத்தால், அவர்கள் எல்லாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என் நினைத்துக்கொள்ளலாம் //
இப்போவே அப்படித்தானே இருக்கு துவா?
சரி சரி.. பத்திரமா ஊருக்குப் போய்ட்டுவாங்க.. நம்ம யானைகிட்ட சொல்லி உங்க ஒட்டகங்களைப் பார்த்து கவனிச்சிக்கிடச் சொல்றேன் :)
நான் திரும்பி ஆகஸ்ட் தான். எல்லாரும் ஊருக்குப் போய் வலைபதிவர் விடுமுறையாக்கிட்டீங்கன்னா நம்ம கதி அதோ கதி தான் :).. உஷாவும் ஜூலையா?!!ம்ம் பார்ப்போம் :)
//இப்போவே அப்படித்தானே இருக்கு துவா? //
இதுலே உள்குத்து ஏதும் இல்லையே?
நான் ஆகஸ்டு வரைக்கும் எல்லாம் ஊரில் இருக்கப்போவதில்லை. ஜூலையிலேயே வந்து விடுவேன். அதுவரைக்கும் என் ஒட்டகத்தை எல்லாம் உங்க யானையை வச்சு பத்திரமா பார்த்துக்கோங்க!
//சொர்கத்துக்குப் போகிறேன்!//
கீதாக்கா கேட்டாங்களா?
யானை ஓடுற ஸ்பீட பார்த்து ஒட்டகமெல்லாம் அரண்டு போயிறப்போகுது. அப்புறம் நீங்க தான் வந்து ஷேக் கு நஷ்ட ஈடு கொடுக்கனும், பார்த்து.
//என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா?//
கோடில ஒரு வார்த்தை.
மனசு,
கீதாக்காவா? அவங்க இங்கே வரவேயில்லையே?
அந்த ஒட்டகம் என்னோட சொந்த ஒட்டகம். நஷ்ட ஈடு எல்லாம் கொடுக்க வேண்டாம். அப்படியே ஏதுமானாலும், யானையை தந்துடுவாங்க நம்ம பொன்ஸ்! என்ன பொன்ஸ், சரி தானே?
யானைக்கு நல்லா திருஷ்டி பட்டுடுச்சு துவா.. நீங்க திரும்பி வரும்போது ஒட்டகம் கண்டிப்பா இருக்கும். யானை தான் சந்தேகம்... எல்லாரும் யானையைப் பார்த்து கண்வைக்கிறதப் பார்த்தா, எவ்வளவு நாள் தாங்கும்னு தெரியலை!! :(
அப்படியா சேதி பொன்ஸ்?
அப்போ திரும்ப வந்தவுடன், ஒட்டகம் விற்பனைக்கு'னு ஒரு அறிவிப்பு விட்டுடா போச்சு? :0)
நல்லபடியா போயிட்டு வாங்க....
அது சொக்கம் தான், அதில் என்ன சந்தேகம்........
சிவா,
சொர்க்கம் என்பதில் சிலருக்கு சந்தேகம் இருக்கத்தானே செய்கிறது? இங்கு வந்தவுடன் என்னவோ நிலவிலிருந்து குதித்தது போல "சென்னைன்னாலே எனக்குப் பிடிக்கலேப்பா"னு டயலாக் விடறவங்க இருக்காங்க. அவங்களுக்காகத்தான் இந்த மாதிரியான தலைப்பு.
நன்றி.
ஹெல்லொ, வந்துட்டேன், சொர்க்கமா இது, இந்த வெயிலும், கசகசப்பும்,
அது, சரி, நிலவு நண்பன் கல்யாணத்திற்குப் போறீங்களா?எங்களோட வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும். என்னமோ நீங்க என்னோட வலைப்பூவிற்கு வரமாதிரி இல்லை கீதா அக்காவா, அவங்க எங்கே வந்தாங்கனு சொல்றீங்க. நான் அப்போ அப்போ முக்கிய நிகழ்ச்சிகளிலே கலந்துக்கறேன்.
உங்க ஒட்டகம் எல்லாம் ராஜஸ்தான் ஒட்டகமா? துபாய் ஒட்டகமா? பார்த்தால் ராஜஸ்தானில் சுட்ட மாதிரி இருக்கு.
விடுமுறை நாட்கள் இனிதே கழிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாங்க வாங்க கீதா,
உங்களுக்காகத் தான் நிறைய பேரு காத்திருக்காங்க.
அங்கே வெயிலா? இங்கே 44°C தான். இதுக்கு அது எவ்வளவோ பரவாயில்லை தானே?
நிலவு நண்பன் திருமணத்திற்கு போக இயலாது. வாழ்த்துக்கள் மட்டுமே!
உங்க வலைப்பூ எல்லாம் இலக்கியம், எனக்கு அதிலெல்லாம் அவ்வளவு ஞானம் இல்லையே?
அந்த ஒட்டகம் நானே என்னோட காமிராவிலே இங்கே துபாயிலே சுட்டது. காப்பிரைட்டு வைச்சிருக்கேன், தெரிஞ்சிக்கோங்க!
துபாய் வாசி,
ஏன் அன்பே சிவம், பிடிக்காதா உங்களுக்கு? யாரானும் கமல் ரசிகர் கேட்டா(நிறைய இருக்காங்க வலை உலகிலே) உதைக்கப் போறாங்க.
எனக்காக நிறையப்பேர் காத்திருக்காங்களா? எதுக்கு? நேத்திக்கு நம்ம "தேவ்" கழுதப்புலிகிட்டே கடி வாங்கின மாதிரி உங்க ஒட்டகம் கிட்ட மாட்டறதுக்கா?
அரபு ஒட்டகம் தானா, நல்லாத் தெரியுமா?
கீதா, சம்பந்தமே இல்லாமல், தலைவியைக் காணோம்னு சொன்னவங்களைத்தான் சொல்றேன்.
தேவ் கடிபட்டது எனக்குத் தெரியாதே? இது அரசியலில் ஏதாவது சதியாக இருக்குமோ?
போட்டோ எடுத்ததே நான் தான்! உங்களுக்கு நிரூபிக்கறதுக்காக DNA டெஸ்ட்டா செய்யமுடியும் ஒட்டகத்துக்கு?
ரொம்பப்பெரிய ரிரிரிரிரீரிரிரீரிர்ரீரிரீரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரீரிரிரிரிரீரிரிரீரிரீர்
நன்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ஊருக்கு கெளம்பிட்டீங்களா? உங்களை ஆறு ஆட்டத்துக்கு கூப்பிட்டு இருக்கிறேன்..இங்கே பார்க்கவும்
http://manathinoosai.blogspot.com/2006/06/6.html
Post a Comment
<< Home