நெஞ்சைப்பிழியும் சோகம்
இன்று துபாயின் பத்திரிக்கைகளில் வெளியான ஒரு செய்தி.
32 வயதான ஆரோக்கியசாமி என்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு காவலாளி கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். அவர் ஒரு கட்டுமானத் துறையைச் சார்ந்த அலுவலகத்தின் இயந்திரக்கிடங்கில் காவலாளியாக வேலையில் இருந்த போது, இயந்திரங்களத் திருட வந்த யாரோ இவரைக் கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 6 வருடங்களாக இவர் இங்கு வேலை செய்து வருகிறாராம். அடுத்த மாதம் விடுமுறைக்குச் செல்வதாக ஆவலுடன் இருந்திருக்கிறார். பாவம். ஆனால், விடுமுறைக்குச் செல்ல மிக்க ஆவலுடன் எதற்காக இருந்திருக்கிறார் என கேட்கும் போது தான் மனம் வேதனைப்படுகிறது. தனது மனைவியையும், பிறந்தது முதல் பார்த்திராத தனது ஒரு வயது மகனையும் பார்க்க இருந்திருக்கிறார். இதைப்படிக்கும் நமக்கே இப்படி இருக்கிறதே, அவரது மனைவியின் நிலமை?
சமீபத்தில் பக்ரைனில் நடந்த தீ விபத்தில் இறந்த 16 பேரின் சோகக் கதை அணையும் முன், இப்படி இன்னுமொரு செய்தி.
கடல் கடந்து பெரும் கனவுகளுடன் வந்த இவர்களின் உயிர் இப்படி அனாவசியமாக போவது பரிதாபத்திற்குரியது.
அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கு வேண்டிய பலத்தைத் தரவும் ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக!
21 Comments:
பிரார்தனையில் இணைந்து கொள்ளும் மற்றொரு உள்ளம்.
உங்கள் பிரார்தனையில் என்னையும் இணைத்துக் கொள்கின்றேன்.
அன்புடன்...
சரவணன்.
இந்த செய்தியைக் கேட்பதற்கே கஷ்டமாக இருந்தது. அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவர் குடும்பத்தவருக்கு இத்துன்பத்தைத் தாங்கும் மனவலிமையையும் இறைவன் வழங்க வேண்டுகிறேன்.
செய்திதாளில் படித்து நாங்களும் மிக வருந்தினோம்.
திருட்டுப்போன இயந்திரத்தின் அமீரகப்பண மதிப்பு 100 திராம்தான்.
ஆனால் ஒரு குடும்பமோ தலைவனை
இழந்துவிட்டது.
பரிதாபத்திற்குரிய நிகழ்ச்சி.. இது போன்றவை நடக்காமல் இருக்க ஆசைப்படுவது, வேண்டுவது தவிர வேறு வழியில்லை..ஆனாலும் நடக்கும் எனும் உண்மை முகத்தில் அறைகிறது.
//அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவர் குடும்பத்தவருக்கு இத்துன்பத்தைத் தாங்கும் மனவலிமையையும் இறைவன் வழங்க வேண்டுகிறேன்.//
என்னையும் இந்த பிரார்த்தனையில் இணைத்துக்கொள்கிறேன்...
வருந்துகிறேன்..
பிரார்த்தனையில் கலந்து கொள்ள முன்வந்த அனைவருக்கும் நன்றி.
100 திராமுக்காக ஒரு கொலை? மனித உயிருக்கு சிலர் கொடுக்கும் மதிப்பு இதிலிருந்தே தெரிகிறது.
வேறு ஏதாவது தகவல் தெரிய வந்தால் தெரியப்படுத்துகிறேன்.
ம்ச்......... போங்கப்பா.
மனசு பேஜாராப்போச்சு.
பாவம் அவர் மனைவியும், அந்தக் குழந்தையும்.
எந்த மாதிரி ஆறுதல் சொல்ல முடியும்?
கடவுளை வேண்டுவதைத்தவிர வேற ஒண்ணும் தோணலை(-:
பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்திருந்தும் அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது
உங்க ஊரிலேயே இந்த வேலை நடக்கிறதா?
யார்தான் பாதுகாப்பு கொடுப்பது நம் மக்களுக்கு/?
ரொம்பப் பாவம்பா.
போறாத காலம்.
யாருக்கோ காவலுக்குப் போய் தன் குடும்பத்தை விட்டுப் போனாரே.
நன்றி துளசி, மருதநாயகம் & வள்ளி
மருதநாயகம் - இது என்ன செய்தி? புதிதாக இருக்கிறதே? நிவாரணம் பக்ரைன் நாட்டு விபத்தில் பலியானவர்களுக்கானதா? விளக்குங்களேன்.
வள்ளி - இங்கும் இந்த மாதிரியெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. சிறிது நாட்களுக்கு முன்பு நேபாளத்தினைச் சேர்ந்த ஒரு காவலாளி இதே போல கொல்லப்பட்டார்.
உறவுகளின் உன்னதம் பிரிவினில் தான் விளங்குகிறது.. வலிக்கிறது.
அவர் தம் குடும்பத்திற்காக நானும் பிரார்த்திக்கிறேன்.
பார்க்கும்;படிக்கும் செய்திகள்! கடவுள் இருக்கிறாரா? என எண்ண வைக்கிறது.
பட்டகாலிலே படுமென ஏழைகளுக்கு மேலும் துன்பம்.
காலம் தான் கவலையை அந்த மனைவிக்கு ஆற்ற வேண்டும்.
வேதனையாக இருக்கு! யாருக்காக அழுவோம்.
யோகன் பாரிஸ்
// " உங்க ஊரிலேயே இந்த வேலை நடக்கிறதா? " //.
நண்பர்களே! இதைவிட பெரிய,பெரிய வேலையெல்லாம் இங்கு நடக்கிறது. நான் வேலைசெய்யும் இடத்திலே க்ட்டுமானப்பணிக்காக தோண்டும் பொழுது கொலைசெய்து புதைக்கப்பட்ட
எத்தனையோ எலும்புக்கூடுகள் கண்டு எடுக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம்.
தமிழர்களுக்கு போதாத காலமா? ஏன் இப்படி நடக்கிறது.
கணவனை இழந்தவளுக்கு காட்டுவது இல் என்பார்கள் தந்தைமுகம் காணதா குழந்தையும் வருவார் அத்தான் அத்தனையும் கொண்டு வருவான் ஆசைமுத்தம் கொடுப்பான் குழந்தைகக்கு என ஆவலுடம் இருந்த அந்த நங்கையின் சோகம் சொல்லவும் கூடுமோ!!!!
என்னது தமிழருக்கு வந்த சோதணை
வருவான் அத்தான் சம்பாதித்த அத்தனையும் கொண்டுவருவான். குமிழ் முத்தம் கொடுப்பான் குழந்தைக்கு என ஆவலுடன் இருந்து அந்த நங்கைக்கு நாம் காட்டுவது இல்.
அந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாத ஒரு சோகம். இதுபோல யாருக்கும் இனிமேல் நிகழக்கூடாது.
அண்மையில் படித்த செய்திகளும். கேட்ட நிகழ்வுகளும் அமீரகத்தில் குற்றங்கள் அதிகமாகிவிட்டதாகவே தோன்றுகிறது.
வருந்துகிறேன். பிரார்த்தனையில் என்னை இணைத்துக் கொள்கிறேன்.
என்னன்னு சொல்லித் தேற்றுவது பாதிக்கப்பட்ட குடும்பத்தை?
தந்தையை போட்டோவில் மட்டுமே பார்க்கும்படியாகிவிட சிறு குழந்தையை?
மனசு கனத்துபோகிறது சூழலின் தீவிரம் உறைக்கிற காரணத்தால்!
இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றேன்.
குடும்பத்தவர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அய்யகோ! படிக்கும் போதே நெஞ்சம் கனக்கிறதே. செல்லுமிடமெல்லாம் தமிழன் நிலை இதுதானோ?! பகரினில் என் இனத்தவர் இறந்த செய்தியறிந்து அதிர்ச்சியில் இருந்து மீள முன்பு இப்படி இன்னுமொரு சோகமா?
ஆரோக்கியசாமியின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் பொதக்குடி நுருல் அமீன் எழுதுவது. வேலை செய்ய வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டது வருந்த தக்கது இன்னா லில்லாகி.....
Post a Comment
<< Home