உயிர்காக்க எட்டரை கோடி
உயிரின் விலை குறைந்து விட்டதா என்ற பதிவில், திரு. மனதின் ஓசை அவர்கள் இம்மாதிரி பாதசாரிகள் மரணம் நடப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா என கேட்டிருந்தார். அதற்கு இப்போது பதில் இப்போது கிடைத்திருக்கிறது.
அரசாங்கம் சுமார் 70 மில்லியன் திர்ராம் செலவு செய்து விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் எல்லாம் பாதசாரிகளுக்கான நடை மேம்பாலத்தைக் கட்டப்போகிறது. இதனால் இம்மாதிரி விபத்துக்களால் இறக்கும் பாதசாரிகளின் விகிதம் சுமார் 40 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டில் மட்டும் 23 பேர்கள் இம்மாதிரி இறந்து போயிருக்கிறார்கள் ஷேக் சாயது சாலையில் (மொத்தம் 100 பேர்கள் துபாய் முழுவதும்). துபாய் முழுவதும் 17 புதிய பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் கட்டப்போகிறார்கள்.
என்ன தான் புதிது புதிதாக பாலங்கள் கட்டப்பட்டாலும், அதை உபயோகப்படுத்தாமல் சட்டத்தை மீறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? அதையும் தடுக்க சாலைகளின் நடுவே தடுப்பு வேலியும் அமைக்கப்போகிறார்கள்.
அதையும் தாண்டிக்குதிக்காமல் இருந்தால் சரி.
5 Comments:
துபாய் ராஜா..
இது மனதுக்கு ஆறுதலை தரும் செய்தி.... அந்த 40% உயிர்களுக்கு வாழ்வு கொடுத்த அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள்...
//அதையும் தடுக்க சாலைகளின் நடுவே தடுப்பு வேலியும் அமைக்கப்போகிறார்கள்.
அதையும் தாண்டிக்குதிக்காமல் இருந்தால் சரி.//
நல்லதே நடக்கும் என நம்புவோம்...
நன்றி மனதின் ஓசை
துபாய்வாசியை துபாய் ராஜா ஓரங்கட்டிவிட்டாரோ?
//
துபாய்வாசியை துபாய் ராஜா ஓரங்கட்டிவிட்டாரோ?
//
மன்னிக்கவும்.. எனக்கு இந்த குழப்பம் எப்பொழுதுமே உண்டு.. உங்களில் ஒருவருக்கு மணம் ஆனபொழுது வாழ்த்து சொல்லும்பொழுது கூட பழைய பதிவுகளை சரி பார்த்து விட்டுதான் சொன்னேன். :-)
இதே மாதிரி ஏனொ தெரிய வில்லை முத்துவையும் குழலியையும் கூட ஆரம்பத்தில் குழப்பிக்கோண்டேன்.. இப்பொது தெளிவாகிவிட்டது..
உங்கள் குழப்பங்கள் இப்போது தீர்ந்ததில் மகிழ்ச்சியே!
நல்ல வேளை எனக்குக் கல்யாண வாழ்த்து அனுப்பி, குடும்பத்தில் குழப்பமுண்டாக்கமல் இருந்தீர்களே?
//"துபாய்வாசியை துபாய் ராஜா ஓரங்கட்டிவிட்டாரோ?"//
அன்பு துபாய்வாசி,துபாயில் எட்டு வருடமாக உள்ள உங்களை இரண்டு வருடமாக உள்ள நான் ஓரம்கட்ட முடியுமா?.நானும் துபாயில் வசிப்பதே மனதின்ஓசை குழப்பத்திற்கு காரணம்.
//உங்களில் ஒருவருக்கு மணம் ஆனபொழுது வாழ்த்து சொல்லும்பொழுது கூட பழைய பதிவுகளை சரி பார்த்து விட்டுதான் சொன்னேன். :-)//
நன்றி மனதின் ஓசை.எனது நிரந்தரசுட்டி
www.rajasabai.blogspot.com.
Post a Comment
<< Home