துபாயில் சுடும் சம்பவம்!
உலக நாடுகள் எங்கும் இப்படித்தான் ஒரு பாதுகாப்பே இல்லாமல் இருக்கிறது என்றால், துபாயிலுமா?
பாருங்கள், நேற்று இங்கு ஒரு வீட்டில் நடந்த சுடும் சம்பவத்தை. ஒரே ஒரு முறை சுட்டிருந்தாலும் பரவாயில்லை, இரண்டு முறை சுட்டிருக்கிறார்கள்.
பயன்படுத்திய ஆயுதங்களோ மிக சாதாரணமாக எல்லா இடத்திலும், ஏன் எல்லார் வீட்டிலும் கிடைப்பவைகளாம்.
இளகிய (?) உள்ளம் கொண்டவர்கள் இப்படங்களைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சம்பவம் நடந்தது வேறு எங்குமில்லை. எனது வீட்டில் தான்!
முதலில் சுட்டது
பார்த்து விட்டு பரிதாபப்படுபவர்கள் தாராளமாக பரிதாபப்படலாம். ஏனெனில் இது நானே சுட்டது.
பார்த்து விட்டு திட்டுகிறவர்கள் தாராளமாக திட்டிவிட்டும் போகலாம்! அடிக்க வருபவர்கள் துபாய் குறுக்குச் சந்து முனையில் நாளை மதியம் 12.00 மணிக்கு 47° C வெயிலில் காத்திருக்கவும்
பி.கு.: தொடர்ந்து சில பதிவுகள் சீரியஸான பதிவுகளாக போய்விட்டதா? அதனால் தான். மூடு மாற்றுவதற்காக!
24 Comments:
ஓ! துபாயில் நேற்று ஏற்பட்ட கரும்புகைக்கும், கருகிய நாற்றத்திற்கும் நீங்கள் 'சுட்டது'தான் காரணமா??!!.
நாங்கள் என்னவோ,ஏதோ என்று பயந்துவிட்டோம். :-)))
என்னமா சுட்டிற்கள்! வேறு எதையிம் சுடுவீர்களா?
நல்லா வட்டமா சுட்டு இருக்கீங்க.
அடுத்தப்பில இட்டிலி,வடை,
பணியாரம் எல்லாம் சுடுவீர்களா?
துபாய் ராஜா,
நேற்றைய பகல் நேரப்புகைக்குக் காரணம் நானில்லை. நான் சுட்டது இரவில். பகலில் வந்தது வழக்கமான தூசிப்புயல்.
பொதக்குடியான் (அப்படின்னா என்னாங்க?),
வாய்ப்பு கிடைக்கட்டும், உங்களுக்காக தனியாக சுட்டுக் காட்டுகிறேன்.
மனு
வீட்டுக்காரம்மா திரும்ப வரும் வரைக்கும் இதெல்லாம் அடிக்கடி நடக்கும். கண்டுக்காதீங்க.
வட்டமா வராதது எல்லாம் நாங்க போட்டோ போடமாட்டோம்லே?
ஐயா நாங்களும் சுடுவோம் அதைப் பற்றி கூடிய் விரைவில்.
அரேபியாவில் இருக்கும் போது கணவர்களின் கட்டாயப்பாடம் "சமையல்"
நல்லா இருங்க ராசா
சிவா,
தற்காலிக பிரம்மச்சாரி என்பதால் தான் நானும் 'இந்த வன்முறையில்' இறங்கி விட்டேன்.
கண்டுக்காதீங்க!
[நான் துபாய்ராசா இல்லை! அவர் வேறு :)]
சாரி நீங்க ராசா இல்லை வாசி, நான் சுட்டதை இங்கே காணுங்கள்
ஒளி மயமான எதிகாலம்.....
கல்லில் சுட்டதும்..
சுட்டதைக்
காமிரா பொட்டியில் சுட்டதும்..
அதை இங்கே இட்டதும்..
இட்டதைக் கண்டொருவர்
ஐடியாவைச் சுட்டதும்..
=== ஆகா... சுட்டதும் பெற்றதும்..
அடுத்து மிக்ஸியில் சுற்றியதும் வருமா? ;)
பொன்ஸ், சுட்டதும் தின்றதும் என பெயர் வைத்துக் கொள்ளாலாமா
பொன்ஸ்
சுட்டதுக்கெல்லாம் நீங்க கழுதை, சே - கவிதை எழுதுவீங்கன்னு தெரியாம போச்சே? நான் சுட்டதை விட நீங்க சுட்டது - சூப்பர்.
சிவா - டைட்டில் சரியில்லை.....தீர்ப்பை மாத்திச் சொல்லு!
ஒரு இன்ஷ்டண்ட் கவிதாயினியைச் சுட்டகவின்னு சொல்லிட்டீங்களே துவா..
தோசையைப் பாத்து நான் 'வடிச்ச' கவிதை, எப்படிச் சுட்டதாகச் சுட்டலாம்!!!
துவா.. தீர்ப்பை மாத்தி சொல்லு(ங்க)!!
பொன்ஸ்
தீர்ப்பை மாத்தியாச்சு (ங்க எல்லாம் வேண்டாமே?).
இன்ஷ்டன்ட் தோசை மாவில் சுட்ட தோசைக்கு, இன்ஷ்டன்டா ஒரு கவிதை வடித்த பொன்ஸுக்கு "இன்ஷ்டன்ட் கவிதாயினி" என்ற பட்டம் வழங்கப்படுகிறதுதுதுதுதுதுதுதுது!
பொதக்குடியான் (அப்படின்னா என்னாங்க?),
வாய்ப்பு கிடைக்கட்டும், உங்களுக்காக தனியாக சுட்டுக் காட்டுகிறேன்.
"பொதக்குடி ஊருங்கோ"
//கல்லில் சுட்டதும்..
சுட்டதைக்
காமிரா பொட்டியில் சுட்டதும்..
அதை இங்கே இட்டதும்..
இட்டதைக் கண்டொருவர்
ஐடியாவைச் சுட்டதும்..
//
ஆஹா! கவிதை கவிதை!
தோசையைப் பற்றிய பதிவில்
ஓசையின்றி சட்டென கவிபடைத்த
ஆற்றலரிசியார் படகு அக்கா பொன்ஸ் அவர்கள் இனி
தோசைக் கவிஞர் என்று பாரோரால் போற்றப்படுவார்.
ஐயா சிபி,
நான் ஏற்கனவே கொடுத்த பட்டத்தை மாற்றியமைத்து நீரே ஒரு பட்டம் கொடுக்கும் உரிமையினை யார் உமக்குக் கொடுத்தது?
//இன்ஷ்டன்ட் தோசை மாவில் சுட்ட தோசைக்கு, இன்ஷ்டன்டா ஒரு கவிதை வடித்த பொன்ஸுக்கு "இன்ஷ்டன்ட் கவிதாயினி" என்ற பட்டம் வழங்கப்படுகிறதுதுதுதுதுதுதுதுது!//
இதையெல்லாம் படிக்க மாட்டீரா? அறியாமையால் செய்த தவறா அல்லது தெரிந்தே செய்யும் துணிச்சலா?
தலைவரே துபாய்வாசி.. தோசையைத் தான் திருப்புறீருன்னு பார்த்தேன்.. இப்படி ப்ளேட்டையும் திருப்புறதுலயும் பெரியாளா இருக்கீய.. !!
அந்தப் பட்டத்தை நானே எனக்கு வச்சிகிட்டதுக்கப்புறம், அதை நீங்க வழி மொழிஞ்சிட்டு, ஏற்கனவே வார்த்து முடிச்ச தோசைக்கரண்டியப் பிடிச்சி சீன் காட்டுனதுக்கு
இன்னொரு புண்ணியவன் தரும் சூடான புது மாவு தோசையை..ச்சீ.. பட்டத்தைக் குறுக்கே விழுந்து மறிக்கிறீரு!!
பொன்ஸ்
என்ன இருந்த்தாலும் உங்க சங்கத்து ஆளு கொடுக்கற பட்டம் தானே வாங்குவீங்க? நான் கொடுத்த பட்டம் சரியில்லைன்னு ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை சொன்னீங்களா?
அதை சொல்லாம சும்மா இருந்துட்டு இப்போ அடுத்த பட்டம் வந்தப்பறம் கரண்டி, மாவுன்னு கதை விடுறீங்களே?
//நல்ல கவிதை சிபி. //
ஏம்பா! பாரோர்னா நாங்கழ்தான?
- என்று ஒரு அப்பவி குடிமகன் கேட்கிறார்.
(உலகில் இருப்பவர் உலகோர் என்றால் பாரில் இருப்பவர் பாரோர் என்று யாரோ சொல்லிக் கொடுத்துவிட்டார்களாம்)
தோசைக்கு சட்னி/சாம்பாருக்கு பதிலாக ரசம் கொடுப்பது போல, பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு பின்னூட்டத்தை அளிக்கும் சிபியை என்ன செய்யலாம்?
என்ன சிபி, துபாயில் தானே வெயில் அதிகம்?
தோசைக்கு ரசம் சூப்பரான காம்பினேஷன்.. து.வா முயலுங்க..
அதான் குடிமகன்னு சொல்லியாச்சே.. அவர் என்ன வேணாலும் பேசலாம்..
பொன்ஸ்
உங்க சங்கத்து ஆளு சொன்னா எதுவா இருந்தாலும் வழி மொழிஞ்சிடுவீங்க?
'குடிமகன்' ? அதைக் கவனிக்கலியே?
Post a Comment
<< Home