2006/08/11

மின்சாரத்தை சேமியுங்கள்!

நமக்கு மின்சாரம் எவ்வளவு இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது என்பது, அது இல்லாமலிருக்கும் நேரத்தில் தான் தெரிகிறது. நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்?

இப்போதெல்லாம் ஆட்டுக்கல், அம்மி போன்ற பொருட்கள் பல வீடுகளில் இருப்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் அதை நமக்கு உபயோகப்படுத்தத் தெரியுமா? (ஆண்களுக்கும் சேர்த்துத் தான், பெண்களுக்கு மட்டுமே என எழுதினால், அதற்கு யாரும் சண்டைக்கு வரக்கூடாது பாருங்கள்?). குளிர் சாதனப்பெட்டிகள் இல்லாத வீடுகள் உண்டா?

இப்படி இன்றியமையாத மின்சாரத்தை நாம் பல வழிகளில் வீணாக்குகிறோம். யாரும் உபயோகப்படுத்தாத நேரத்திலும் பல மின்சாதனங்கள் தேவையில்லாமல் உபயோகத்தில் வைத்து மின்சாரம் வீணாக்கப்படுகிறது.

ஏறக்குறைய எல்லோர் வீட்டிலும் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் தான் அதிகமாக மின்சாரம் வீணாக்கப்படுகிறது. இது பலருக்குத் தெரிவதே இல்லை. எப்படி என்று கேட்கிறீர்களா?


இப்போது நீங்கள் வீட்டில் இருந்து இதைப்படிப்பதாக இருந்தால் உடனே நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை நீங்களே சோதிக்கலாம்.

குளிர்சாதனப்பெட்டியினைத் திறந்து பாருங்கள். விளக்கு எரிந்து
கொண்டிருக்கும். யாருமே இல்லாத அவ்விடத்தில் எதற்கு விளக்கு?


இதையெல்லாம் யாருமே கவனிப்பதில்லை. என்னமோ போங்க!

18 Comments:

At 9:22 AM, August 11, 2006, Blogger Unknown said...

துபாயில் கொஞ்சம் வெயில் அதிகம்தான் :))

 
At 9:22 AM, August 11, 2006, Blogger Unknown said...

துபாயில் கொஞ்சம் வெயில் அதிகம்தான் :))

 
At 9:25 AM, August 11, 2006, Blogger Unknown said...

என்ன தான் நல்லது சொன்னாலும் யார் தான் கேட்கிறாங்க!

வெயில் அதிகம்னு உங்களுக்குத் தெரியாததா மகேந்திரன்?

 
At 9:30 AM, August 11, 2006, Blogger நன்மனம் said...

சேமிக்க ஒரு வழி....

து.வா.... வீட்ல இருக்கும் போது இன்னிக்கி ஒரு நாள், ஒரே ஒரு நாள்..... எல்லா விளக்கையும் அணைச்சிட்டு, குளிர் சாதன பெட்டிகுள்ள ஒக்காந்து படிங்க.... அதுவும் கதவ மூடிட்டு.....

அப்பாடி.... து.வா நாம சொன்னத கேட்டுடுவாரு.... நாளைலேந்து இந்த தொந்தரவு இருக்காது....:-)

 
At 9:35 AM, August 11, 2006, Blogger Unknown said...

நன்மனம்

முக்கியமான விசயத்தை மறந்துட்டீங்க! அறிவுரை என்பது மற்றவர்களுக்கு மட்டுமே! ;)

நீங்க சொன்ன ஆலோசனையை அமுல் படுத்தவும் ஆசை தான். ஆனால், கணினி உபயோகப்படுத்த முடியாதே என்ற கவலை தான். உங்கள் பின்னூட்டம் எல்லாம் படித்து பதில் சொல்ல வேண்டிய கடமை அழைக்கிறது தோழா!

 
At 8:54 PM, August 11, 2006, Anonymous Anonymous said...

Dubai Electricity & Water authority always welcomes ideas to save electricty. You can send your refrigerator light usage suggestion and win a big prize. I will recommend for you since I workfor this authority.

 
At 7:20 AM, August 12, 2006, Blogger Unknown said...

Venkataraman Sir,

Since you work for DEWA, you can implement and take the 'gift' also if they give.

The suggestions/advises always for others! That's the basic idea... :))))

 
At 8:06 AM, August 12, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

//Since you work for DEWA, you can implement and take the 'gift' also if they give.//

"பரிசு கொடுத்தா நான் எடுத்துக்கிறேன்.. வேற ஏதாச்சும் கொடுத்தா?" - நன்றி திருவிளையாடல்

சுட்டதைத் தொடர்ந்து ஏதோ சீரியஸ் பதிவு போலிருக்குன்னு தாண்டிப் போய்ட்டேன்.. இதுவுமா சுட்டது?!!

 
At 8:19 AM, August 12, 2006, Blogger Unknown said...

பொன்ஸ்

இதெல்லாம் சொந்த சரக்கு. ஆனாலும், மத்தவங்களுக்காக, என் இந்த மாதிரி 'அதிபுத்திசாலித்தனமான' ஐடியா எல்லாம் மத்தவங்க அனுபவிக்க மட்டுமே! ஹே ஹே

 
At 1:31 PM, August 15, 2006, Blogger நாமக்கல் சிபி said...

//குளிர்சாதனப்பெட்டியினைத் திறந்து பாருங்கள். விளக்கு எரிந்து
கொண்டிருக்கும். யாருமே இல்லாத அவ்விடத்தில் எதற்கு விளக்கு?
//

உங்களுக்கு இருக்கும் சமூக அக்கறை வேறு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.

:)

 
At 1:51 PM, August 15, 2006, Blogger Unknown said...

நன்றி சிபி!

உங்களுக்குத் தெரிந்த அக்கறை யாருக்குத் தெரிகிறது?

சுதந்திர தின வாழ்த்துக்களுடன்!

 
At 3:44 PM, August 15, 2006, Blogger உங்கள் நண்பன்(சரா) said...

//யாருமே இல்லாத அவ்விடத்தில் எதற்கு விளக்கு? //

ஆமா! நீ கேட்பதில் என்ன தப்பு? ஏன் யாருக்குமே இந்த சமூக அக்கரையில்லை?


குளிர்சாதனப் பெட்டியில மட்டுமில்ல,
அப்போ அப்போ உன் தலயிலையும் விளக்கு எரியுது அதையும் கொஞ்சம் கவனிச்சிக்கோ...

அன்புடன்...
சரவணன்.

 
At 3:48 PM, August 15, 2006, Blogger Unknown said...

நன்றி 'உங்கள் நண்பன்' சரவணன்,

என்னோட அக்கறையினை நீங்களும் புரிந்துகொண்டீர்களே?

என் தலையில் எரியும் விளக்கு உங்களுக்கும் தெரிகிறதே? பாம்பின் கால் பாம்பறியும் என சும்மாவா சொன்னார்கள்? ;)

 
At 3:58 PM, August 15, 2006, Blogger நன்மனம் said...

//என் தலையில் எரியும் விளக்கு உங்களுக்கும் தெரிகிறதே?//

//பாம்பின் கால் பாம்பறியும் என சும்மாவா சொன்னார்கள்? ;)//

ஓ இது தான் இல்லாதத பத்தி பேசறதா ;-)

 
At 4:49 PM, August 15, 2006, Blogger Jazeela said...

எவ்வளவு சீரியஸான பதிவ கேலிக்கூத்தாக்கிட்டீங்க? விவசாயிக்கிட்ட கேட்டு பாருங்க மின்சார பிரச்சனைப் பற்றி. கட்-அவுட்களிலும் விளம்பரங்களுக்களிலும் வீணாக போகும் மின்சாரத்தை என்ன செய்ய? யாரு கேட்க? ;-(

 
At 7:24 AM, August 16, 2006, Blogger Unknown said...

நன்றி நன்மனம்!

உங்களுக்கும் அதே பதில் தான்... 'பாம்பின் கால்.........'. இல்லாதது என கண்டுபிடித்த உங்களுக்கு. ;)

 
At 7:26 AM, August 16, 2006, Blogger Unknown said...

ஜெஸிலா,

இப்போ நீங்க தான் ஜாலியான பதிவை சீரியசா ஆக்கிட்டீங்க!

பணக்கார விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுத்தால், உண்மையான ஏழை விவசாயிக்கு எங்கே கிடைக்கும் இலவச மின்சாரம்? அதில் ஒரு ஒழுங்கு முறை கொண்டுவரும் வரை இதற்குத் தீர்வு இல்லை.

உங்கள் பார்வைக்கும் ஏக்கத்திற்கும் நன்றி!

 
At 4:24 PM, August 27, 2006, Anonymous Anonymous said...

குளிர்சாதனப்பெட்டியினைத் திறந்து பாருங்கள். விளக்கு எரிந்து
கொண்டிருக்கும். யாருமே இல்லாத அவ்விடத்தில் எதற்கு விளக்கு?
kulir sathana pettiya thirantha than light eriyum.moodi irukkum pothu eriyathu

Leo Suresh
Dubai

 

Post a Comment

<< Home