2006/04/25

சேது - பாகம் 2



மேலே இருக்கும் இந்தப் படத்தைப் பார்த்தால், "சேது" படத்தின் இரண்டாவது பாகம் பார்ப்பது போலத் தானே இருக்கிறது? அப்படித்தான் நானும் நினைத்தேன். இது வேறு ஒன்றும் இல்லை.


நம்ம சென்னை மெரீனா நீச்சல் குளத்தில், கூட்டம் அதிகமாயிடிச்சாம். கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தான் இந்த மாதிரி 'ஆடுறா ராமா' செய்யறாங்க.


தடியெடுத்த நீச்சல் குள நிர்வாகிகளைச் சொல்றதா, இல்லை அவங்களை தடியெடுக்க வைத்த நம்ம மக்களை சொல்றதா? என்னவோ போங்க.....



நன்றி: இந்து பத்திரிக்கை (பட உதவிக்கு)

2006/04/18

6 & 20 வருடங்களுக்குப் பிறகு….

இன்று அபு தாபியில், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் பந்தயம். தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா? இருக்கிறது.


முதலில் 6 வருடம்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஆறு வருடங்களுக்குப் பிறகு ஒரு பொதுவான இடத்தில் மோதுகின்றன. இது ஐக்கிய ராச்சியத்தில் ஷார்ஜாவிற்குப்பிறகு 2ஆவது இடம். சாயது கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச பந்தயமும் இதுவே.


ஷார்ஜா மைதானம் & சாயது மைதானம்














இதற்கு முன் 2000 ஆண்டில் தான் இந்திய பாகிஸ்தான் அணிகள் ஒரு பொதுவான இடத்தில் விளையாண்டன. அசாருதீன் விஷயம் வெளி வந்தவுடன், ஷார்ஜாவில் இந்தியா விளையாடுவதை இந்தியக் கிரிக்கெட் வாரியம் விரும்ப வில்லை. அதற்கப்புறம், அரசியலின் தலையீட்டால் இரண்டு அணிகளும் விளையாடாமலேயே இருந்தன. இப்போது மிக அதிகமாக விளையாடுகிறார்களோ என எண்ணத்தோன்றுமளவிற்கு விளையாடுகிறார்கள்.

எனினும் இன்றைய ஆட்டம் ஒரு நல்ல விஷயத்திற்காகவே. இதனால் திரட்டப்படும் நிதி, சென்ற ஆண்டு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதனால் ஒரு பத்து மில்லியன் டாலர் வரை வசூலிக்க முடியும் என நடத்துபவர்கள் நம்புகிறார்கள். டிக்கெட் விலை குறைந்தது 50 திர்ராமிலிருந்து 2000 தி. வரை வைத்திருக்கிறார்கள். (ஒரு தி. = ரூ. 12). (அதனால் மட்டும் போகாமல் இல்லை, கடமை அழைப்பதாலும் தான்!),

சாயது கிரிக்கெட் மைதானம் பல்வேறு நவீன வசதிகளைக்கொண்டதாம். டிவி ஒளிபரப்பிற்காக விசேஷ ஒளி வசதிகள் கொண்டதாகவும், புல்வெளி ஈரப்பதத்தினை தக்கவைத்துக் கொள்ளும் தன்மையும் கொண்டதாம். பார்க்கலாம் எப்படி என!

20 வருடங்களுக்கு முன்பு!

அது என்னவென்று தெரியாத கிரிக்கெட் ரசிக்கர்களே இருக்க முடியாது. என்ன, சரியான தேதி மறந்திருப்பார்கள். இன்று தான், 20 வருடங்களுக்கு முன் - சேத்தன் ஷர்மா வீசிய கடைசிப்பந்தில் 6 அடித்து, இந்திய கிரிக்கெட்டின் ஷார்ஜா 'ராசி'யை உருவாக்கினார் ஜாவித் மியான்டட்.

இன்று அதே நாளில் இந்தியாவின் தோனி (அல்லது வேறு யாராவது?) பாகிஸ்தானின் பந்து வீச்சை நொறுக்குவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!



பி.கு. - தேவ், என் வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேனப்பா!